அவசர சட்டம்..!! தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு மட்டுமே வேலை..! வெளியான முக்கிய அறிக்கை..!

தமிழ்நாட்டில் தனியார் நிறுவனங்களிலும் தமிழர்களுக்கு மட்டுமே வேலை என்ற சட்டத்தை இயற்ற வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் போட்டித் தேர்வுகளில் தமிழ் மொழி தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழில் புலமை பெறாத வெளிமாநிலத்தவர் இனி தமிழ்நாட்டில் ஆசிரியர் பணியில் சேருவது தடுக்கப்படும். அரசின் இந்த நடவடிக்கை தாமதமானது என்றாலும் வரவேற்கத்தக்கது. பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு கடந்த மாதம் நடந்த போது, அதில் 100-க்கும் மேற்பட்ட வெளிமாநிலத்தவர் பங்கேற்றனர். தமிழ் மொழி தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்படாது தான் இதற்கு காரணம். அந்தத் தவறு இப்போது சரி செய்யப்பட்டிருப்பதில் மகிழ்ச்சி.

அவசர சட்டம்..!! தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு மட்டுமே வேலை..! வெளியான முக்கிய அறிக்கை..!

தமிழக அரசுப் பணிகளில் வெளிமாநிலத்தவர் சேருவதை தடுக்க மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், வனத்துறை சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் ஆகியவை நடத்தும் போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழித் தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட வேண்டும், தமிழ்நாட்டில் தனியார் நிறுவனங்களிலும் 80% பணிகள் தமிழர்களுக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும். இது தொடர்பான தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில்
தமிழ்நாட்டில் தனியார் வேலைகள் தமிழர்களுக்கே என்பதை உறுதி செய்ய அரசு சட்டம் இயற்ற வேண்டும்”. இவ்வாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Chella

Next Post

அதிமுக அலுவலகத்துக்குள் நுழையத் தடை..! தொண்டர்களுக்கு திடீர் உத்தரவு..! போலீஸ் குவிப்பு..!

Sun Aug 21 , 2022
அதிமுக தலைமை அலுவலகத்திற்குள் தொண்டர்கள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்திற்குள் தொண்டர்கள் ஜூலை 20ஆம் தேதி வரை ஒரு மாதத்திற்கு நுழைய அனுமதி இல்லை என்று நீதிமன்றம் அறிவித்திருந்தது. அது நேற்றுடன் முடிவடைந்த நிலையில், இன்று அதிமுக தலைமை அலுவலகத்திற்கு தொண்டர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், இன்னும் தொண்டர்கள் வர வேண்டாம் என்ற அறிவிப்பு பலகை அகற்றப்படாமல் உள்ளது. இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி, […]
’சறுக்கும் ஓபிஎஸ்... சர்கஸ் காட்டும் ஈபிஎஸ்’..! அதிமுக அலுவலக வழக்கில் அதிரடி காட்டிய சுப்ரீம் கோர்ட்..!

You May Like