வேலைவாய்ப்பு செய்தி..!! இல்லம் தேடிக் கல்வி..!! பதிவு செய்வது எப்படி..? முழு விவரம் உள்ளே..!!

கொரோனா பொதுமுடக்கத்தால் ஏற்பட்ட பள்ளி மாணவர்களின் கற்றல் இடைவெளி மற்றும் இழப்புகளை சரிசெய்ய இல்லம் தேடிக் கல்வி என்ற திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியது. அதன்கீழ், பள்ளி நேரங்களுக்குப் பிறகு, தினசரி 1 முதல் 1.30 மணி நேரம் வரை ஆசிரியர் மற்றும் தன்னார்வலர்கள் கொண்டு கற்றல் செயல்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இத்திட்டத்தின் கீழ், வாரத்திற்கு 6 மணி நேரம் கற்றல் அளிக்கும் முழு நேர ( Full time) தன்னார்வலராகவும், வாரத்திற்கு ஒருமுறை/இருவாரங்களுக்கு ஒருமுறை/மாதத்திற்கு ஒருமுறை கற்றல் அளிக்கும் பகுதி நேரத் தன்னார்வலராகவும் தொண்டு செய்யலாம். மேலும், நீங்கள் சொந்தக் காரணங்களுக்காக இல்லம் தேடிக் கல்வியில் இருந்து எளிமையான முறையில் விலகிக் கொள்ளவும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்தி..!! இல்லம் தேடிக் கல்வி..!! பதிவு செய்வது எப்படி..? முழு விவரம் உள்ளே..!!

அடிப்படைத் தகுதிகள் என்ன?

மாணவர்/ அரசுப் பள்ளி மாணவர்/ தனியார் பணியாளர்கள்/சுய தொழில் முனைவோர்/ வேலை தேடுபவர்/ இல்லத்தரசி/ ஆசிரியர் சமூகம்/ ஓய்வு பெற்றோர் என பல்வேறு பிரிவுகளில் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். கண்டிப்பாக குழந்தைகளுடன் உரையாட தமிழ் தெரிந்திருக்க வேண்டும். தமிழ், ஆங்கிலம், கணிதம் கற்றுத்தர வேண்டும். (பயிற்சிகளும் உபகரணங்களும் வழங்கப்படும்) யார் நிர்பந்தமும் இன்றி தன்முனைப்பாக பங்கேற்க வேண்டும்.

விண்ணப்பிப்பது எப்படி?

* illamthedikalvi.tnschools.gov.in என்ற இணைய பக்கத்திற்கு செல்லவும்.

* முகப்புப் பக்கத்தில், தன்னார்வலர்களுக்கான பதிவேற்று படிவத்தை (Volunteer Registration) கிளிக் செய்யவும்.

* பதிவேற்றுப் படிவம், அடிப்படைத் தகவல்கள், கல்வி மற்றும் தொழில் விவரங்கள், முகவரி மற்றும் இதர விவரங்களை நிரப்ப வேண்டும்.

* அடிப்படைத் தகவல் பகுதியில் முழுப் பெயர், பாலினம், பிறந்த தேதி, மொபைல் எண், வாட்ஸ்அப் எண், மின்னஞ்சல், ஆதார் எண் ஆகியவற்றை நிரப்ப வேண்டும். (ஆதார் எண், மின்னஞ்சல் கட்டயாமில்லை)

* நீங்கள் ஏன் தொண்டு செய்ய விரும்புகின்றீர்கள்? முந்தைய கற்பித்தல் அனுபவம்? தன்னார்வ அனுபவம் போன்ற கேள்விகளுக்கு 1000 எழுத்துக்களுக்கு மிகாமல் பதிவிட வேண்டும்.

Chella

Next Post

மத்திய அரசு துறைகளில் மெகா காலியிடங்கள்..!! ரூ.92,300 வரை சம்பளம்..!! இளைஞர்களே முந்துங்கள்..!!

Tue Dec 13 , 2022
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிக்கையை மத்திய அரசுப் பணியாளர் (SSC) தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. பணியின் விவரங்கள்: அறிவிக்கை ஒருங்கிணைந்த மேல்நிலை (10+2) தேர்வு 2022-க்கான (Combined Higher Secondary (10+2) Level Examination) காலியிடங்கள் சுமார் 4500 பணியின் பெயர் இளநிலை எழுத்தர் (Lower Divisional Clerk) / இளநிலை செயலக உதவியாளர் (Junior Secretariat Assistant), தரவு உள்ளிடும் பணியாளர் (Data […]

You May Like