ரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்க!… இந்த பழத்தை ஒரு கைப்பிடி அளவு சாப்பிடுங்கள்!… உடனடி ரிசல்ட்!

குளிர்காலங்களில் அதிகமாகக் கிடைக்கும் இலந்தைப் பழத்திலுள்ள அதிக அளவிலான பாஸ்பரஸ் ரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது. இரும்புச் சத்து குறைபாடு காரணமாக, அனீமியா போன்ற பிரச்சினைகள் உண்டாகின்றன. அதன் காரணமாக உடல் சோர்வு, அஜீரணக் கோளாறு, தலைவலி போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும்.இந்த பிரச்சினைகளைத் தீர்த்து ரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கச் செய்வதோடு, ரத்த ஓட்டத்தையும் சீராக வைத்திருக்க இலந்தைப் பழம உதவி செய்கிறது. இலந்தைப் பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச் சத்து அதிகமாக இருப்பதால் எலும்புகள் உறுதியடையும். ஆஸ்ட்டிரியாபொராசிஸ் போன்ற பிரச்சினைகளால் அவதிப்படுகிறவர்கள் அடிக்கடி இலந்தைப் பழம் சாப்பிட்டு வந்தால் பிரச்சினை கட்டுக்குள் வரும்.

லந்தைப் பழத்தில் இருக்கும் சப்போனின் இயற்கையாகவே தூக்கத்தைத் தூண்டி, நிம்மதியான தூக்கத்திற்கு வழிவகுக்கிறது. அதனால் மனம் அமைதி பெறுவதோடு நரம்பு மண்டலமும் அமைதியாக இருக்கும். மலச்சிக்கல் பிரச்சினைக்கு இலந்தைப்பழம் தீர்வாக இருக்கும். கிடைக்கும் நேரங்களில் ஒரு கைப்பிடி அளவுக்கு இலந்தைப் பழத்தைச் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சினை தீரும். இதிலுள்ள அதிக அளவிலான நார்ச்சத்து வயிற்றுப் பிரச்சினைகளைச் சரிசெய்து ஜீரண சக்தியை அதிகரிக்கச் செய்யும். இலந்தை பழம் நிறைய கிடைக்கும் காலங்களில் வாங்கி, உலர்த்தி, கொட்டை நீக்கி பொடி செய்து சேமித்து வைத்துக் கொள்ளவேண்டும். அந்த பொடியில் ஒரு தேக்கரண்டி எடுத்து, அரிசி கஞ்சியில் கலந்து சாப்பிட்டால் அஜீரணம் நீங்கும். நன்றாக பசியெடுக்கும்.

Kokila

Next Post

ஹார்ட் அட்டாக் வராமல் இருக்க!… தினமும் வெறும் 4 பல் பூண்டு போதும்!... ஆனால் இப்படி சாப்பிடுங்கள்!

Wed Aug 9 , 2023
இன்றைய காலகட்டத்தில் ஹார்ட் அட்டாக் இளம் வயதினரிடையே அதிகளவில் பாதிக்கிறது. இதயத்தை பத்திரமா வைத்துகொண்டால் எந்த பிரச்சனையும் வராது. அதற்கு உடலில் இரத்த ஓட்டம் சீராக இருக்க வேண்டும். இரத்த ஓட்டம் சீராக இருக்க வேண்டுமென்றால் இரத்த நாளங்களில் அடைப்பு இருக்க கூடாது. அப்படியென்றால் நாளங்களில் அடைப்பு இருக்க கூடாது. அடைப்பு உருவாக கூடாது என்றால் கொழுப்பு கெட்ட கொழுப்பு படிய கூடாது. ஆனால் இதற்கு ஒரு தீர்வு உண்டு […]

You May Like