ஜெஇஇ தேர்வு முடிவுகள் வெளியானது..!! முதலிடம் பெற்ற ஹைதராபாத் மாணவன்..!!

ஜெஇஇ அட்வான்ஸ்டு தேர்வுக்கான முடிவுகளை ஐஐடி கவுகாத்தி இன்று வெளியிட்டுள்ளது. இந்த தேர்வு முடிவுகளை அதிகாரப்பூர்வ இணையத்தளமான jeeadv.ac.in-இல் மாணவர்கள் அறிந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இணையதளத்தில் மாணவர்கள் தங்கள் பதிவு எண், பிறந்த தேதி ஆகிய விவரங்களை பதிவு செய்து, தேர்வு முடிவுகளை டவுன்லோட் செய்து கொள்ளலாம். தேர்வு முடிவுகளுடன் இறுதி விடைக்குறிப்பையும் ஐஐடி கவுகாத்தி வெளியிட்டுள்ளது.

இந்த தேர்வில் 360-க்கு 341 மதிப்பெண்கள் பெற்று ஹைதராபாத் மாணவர் வவிலாலா சித்விலாஸ் ரெட்டி அகில இந்திய அளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். பெண்களைப் பொறுத்தவரை நயாகாந்தி நாக பவ்யா 298 மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்துள்ளார். இவர் அகில இந்திய அளவில் 56-வது இடத்தை பிடித்துள்ளார். இந்த அண்டு ஐதராபாத் மண்டலத்தில் இருந்து அதிக அளவிலான மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஜேஇஇ மெயின் தேர்வுகள் கடந்த ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது

Chella

Next Post

செந்தில் பாலாஜியின் உடல்நிலை காவிரி மற்றும் ஈ எஸ் ஐ மருத்துவர்களின் அறிக்கை தொடர்பாக ஆலோசனை நடத்திய அமலாக்கத்துறை…..! அடுத்த கட்ட நடவடிக்கை என்ன…..?

Sun Jun 18 , 2023
சட்ட விரோத பணப்பரிவர்த்தனை தடை சட்ட வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்துள்ளனர். அதோடு அவரை 8 நாட்கள் வரையில் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. அதோடு அமலாக்க துறையினரின் விசாரணை என்பது மருத்துவமனையில் தான் நடத்த வேண்டும் என்றும் நீதிபதி அந்த உத்தரவில் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் தான் செந்தில் பாலாஜியின் உடல்நிலை தொடர்பாக […]
’பதவி வந்தவுடன் இந்த வேலையை மட்டும் செய்யக்கூடாது’..!! யாரை தாக்கிப் பேசுகிறார் செந்தில் பாலாஜி..?

You May Like