நீட் தேர்வு – வடஇந்திய மாணவர்களே அதிக அளவில் தேர்ச்சி ! …ராஜஸ்தான் மாணவி முதலிடம் பிடித்து சாதனை …

ராஜஸ்தானைச் சேர்ந்த மாணவி நீட் தேர்வில் இந்திய அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார். இந்நிலையில் நீட் தேர்வில் வட இந்திய மாணவர்களே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

எம்.பி.பி.எஸ் மற்றும் பிடிஎஸ். படிப்புக்கான நீட்  நுழைவுத் தேர்வு கடந்த ஜூலை 17ல் நடத்தப்பட்டது. நாடு முழுவதும் 3,500 மையங்களில் இத்தேர்வு நடந்தது. இந்நிலையில் தேசிய தேர்வு முகமை இதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது. மொத்தம் 9,93,069 மாணவ , மாணவிகள் தேர்வு எழுதியிருந்தனர். அதில் 56.28 சதவீதம் மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 8,70,074 பேர் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில் தற்போது கடந்த ஆண்டைக்காட்டிலும் கூடுதலாக மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் ராஜஸ்தானைச் சேர்ந்த மாணவி தனிஷ்கா இந்திய அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

முதல் 50 இடங்களில் தமிழகம்

நீட் தேர்வில் முதல் 50 இடங்களில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் இரண்டு பேர் உள்ளனர். அதே போல் கர்நாடகத்தைச் சேர்ந்த மாணவர்கள் 9 பேர் முல் 50 இடங்களில் இடம்பெற்றுள்ளனர். குஜராத் , டெல்லியைச் சேர்ந்த தலா 5 மாணவர்கள் இடம் பெற்றுள்ளனர். தெலுங்கானா , ஆந்திரா   மேற்கு வநங்கத்திலிருந்து தலா 4 பேர் , மஹாராஷ்டிராவில் இருந்து 3 பேரும் , தமிழகம் மற்றும் மத்திய பிரதேம் அரியானாவில் இருந்து தலா 2 மாணவர்கள் முதல் 50 இடங்களை பிடித்துள்ளனர்.

..

விகிதத்தில் தொடர்ந்து தமிழகம் சரிவு

தேர்ச்சி விகிதத்தில் தொடர்ந்து தமிழகம் சரிவை சந்தித்து வருகின்றது. தமிழகத்தில் இருந்து 1 லட்சத்து 32 ஆயிரத்து 167 பேர் தேர்வு எழுதினார்கள். இதில் 51.3 சதவீதம் பேர்தான் தேர்ச்சி அடைந்திருக்கின்றார்கள். அதாவது 67 ஆயிரத்து 787 பேர் மட்டுமே பாஸ்.  கடந்த 2020ம் ஆண்டு 57.44 சதவீதமாக இருந்த தேர்ச்சி விகிதம் , கடந்த ஆண்டு 54.4 சதவீதமாக குறைந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு அதை விட சரிந்து 51.3 சதவீதமாக உள்ள கவலைக்குரியதாக உள்ளது. தேர்ச்சிவிகித பட்டியலில் கடந்த ஆண்டு 23ம் இடத்தில் இருந்து இந்த ஆண்டு 28-க்கு பின் தங்கியுள்ளது.

தனிஷ்காவுக்கு எப்படி முதலிடம் கிடைத்தது ?

ராஜஸ்தான் மாணவி தனிஷ்கா, டெல்லி மாணவி வத்சா ஆசிஷ் பத்ரா , கர்நாடக மாணவர் ஹரிஷ்கேசன் கங்குலி , மற்றொரு மாணவர் ருச்சா பவாஷே ஆகிய 4 பேரும் 99.999773 சதவீதம் பெற்று 715 எடுத்து ஒரே மதிப்பெண் தான். இந்நிலையில் ஒரே மதிப்பெண் பெறும்போது தரவரிசையில் பட்டியலிடும் முறையில் வயதை கருத்தில் கொண்டு பட்டியலிப்படும் இந்த முறையை கடந்த ஆண்டு தேசிய தேர்வு முகமை மாற்றி அமைத்துள்ளது. அதன்படி தனிஷ்காவுக்கு முதல் இடம் கிடைத்துள்ளது.

Next Post

ஆதார் கார்டில் உள்ள மொபைல் நம்பரை எப்படி மாற்றுவது..? தெரிஞ்சுக்க இதை படிங்க..

Thu Sep 8 , 2022
ஆதார் அட்டைக்கான பதிவு செய்யும் போது மக்கள் வேறு மாநிலத்தில் இருப்பதும், குறிப்பிட்ட மொபைல் எண்ணை பயன்படுத்துவதும் இயல்பான ஒன்று தான்.. இருப்பினும், அவர்கள் வேறு முகவரிக்கு ஆதார் அட்டைத் தரவில் தேவையான மாற்றங்களை செய்ய வேண்டும்.. அந்த வகையில் உங்கள் அட்டையில் தொலைபேசி எண்ணை மாற்ற அல்லது புதுப்பிக்க விரும்பினால், நீங்கள் சில விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும். அந்த வகையில் ஆதார் ஆன்லைன் சேவைகளை அணுக பதிவுசெய்யப்பட்ட […]

You May Like