பயங்கர ஆயுதங்களுடன் இன்ஸ்ட்டா ரீல்ஸ் வெளியிட்ட பெண்! போலீஸ் அதிரடி பிடி வாரண்ட்!

பயங்கர ஆயுதங்களுடன் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோ வெளியிட்ட இளம் பெண்ணை கோவை காவல்துறை தனிப்படை அமைத்து தேடி வருகிறது. இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் பிரபலமாக இருக்கும் நபர் வினோதினி இவருக்கு கோவை தமன்னா என்ற பெயரும் உண்டு. ஃபேன்ஸ் கால் மீ தமன்னா என்ற பெயரில் இன்ஸ்டாகிராம் வலைதள பக்கத்தை பயன்படுத்தி வரும் இவர் ஏராளமான ரீல்ஸ் வீடியோக்களை பகிர்ந்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருந்தார். பெரும்பாலான இவரது ரீல்ஸ்கள் வன்முறைகளை தூண்டும் விதமாகவும் கையில் ஆயுதங்களுடனுமே இருக்கும். இதே போன்ற ஒரு ரீல்ஸை சமீபத்தில் வெளியிட்டார் இவர் இதன் காரணமாக இவரை பிடிக்க தனிப்படை அமைத்து இருக்கிறது கோவை மாநகர போலீஸ்.

விருதுநகரைச் சார்ந்த நர்சிங் பட்டதாரியான வினோதினி என்ற தமன்னா 2021 ஆம் ஆண்டு கஞ்சா வழக்கில் சூரிய பிரகாஷ் என்பவருடன் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் குற்றப் பெயர்களை கொண்டிருப்பதும் மேலும் பரக்கா சகோதரர்கள் என்ற மற்றொரு இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தையும் இவர் ஃபாலோ செய்து வருகிறார். அவர்களும் பொம்மை துப்பாக்கி அரிவாள் போன்றவற்றை பயன்படுத்தி ரில்ஸ் செய்யக்கூடியவர்கள் என போலீசாரின் தேடுதல் வேட்டையில் தெரிய வந்திருக்கிறது . இதனால் இவர்கள் இருவரையும் பிடிப்பதற்கு கோவை போலீசார் தீவிரமாக முயற்சி எடுத்து வருகின்றனர். சமூக வலைதளங்களை பொழுது போக்கிற்காக பயன்படுத்தாமல் இதுபோன்ற வன்முறையை தூண்டும் வகையில் பயன்படுத்துவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என காவல்துறை தெரிவித்து இருக்கிறது.

Baskar

Next Post

தாமதமான ஆம்புலன்ஸ்! பைக்கில் பெண்ணுக்கு பிரசவம்! தாயும் சேயும் நலம்!

Wed Mar 8 , 2023
நடுவானில் விமானத்தில் பிரசவம் நடந்து கேள்விப்பட்டிருக்கிறோம் ரயில் பயணங்களின் போது பிரசவம் ஆகியும் கேள்விப்பட்டிருக்கிறோம். தற்போது ஆந்திர மாநிலத்தில் பைக்கில் செல்லும் போது பெண் ஒருவருக்கு பிரசவமாகி இருக்கிறது. நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகியும் இன்னும் சில பகுதிகளுக்கு அடிப்படை மருத்துவ வசதிகள் போக்குவரத்து வசதிகள் ஆகியவை எட்டா கனியாகவே இருக்கின்றன. ஆந்திர மாநிலத்தில் உள்ள அல்லூரி மாவட்டத்தைச் சார்ந்த சிந்தாத பள்ளியில் தேவி என்ற பெண்ணுக்கு […]

You May Like