”காவல்நிலையம், இன்ஸ்பெக்டர், மோப்ப நாய் வாடகைக்கு விடப்படும்”..!! கேரள அரசின் அறிவிப்பால் அதிர்ச்சியில் மக்கள்..!!

ரூ.34 ஆயிரம் கொடுத்து காவல் நிலையத்தை வாடகைக்கு எடுத்துக்கொள்ளலாம் என்று கேரள மாநில காவல்துறை அறிவித்துள்ளது.

காவல் நிலையத்துடன் போலீஸ் இன்ஸ்பெக்டர், மோப்ப நாய், வயர்லெஸ் கருவிகள் உள்ளிட்டவைகளையும் கட்டணம் செலுத்தி வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு வசதிக்கான கட்டணப் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.

நாள் ஒன்றுக்கு காவல் நிலையத்திற்கு ரூ.12,000, வயர்லெஸ் கருவிகளுக்கு ரூ.12,130, மோப்ப நாய்க்கு ரூ.7,280, காவல்துறை ஆய்வாளருக்கு ரூ.3,035 முதல் ரூ.3,340 வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தனியார்கள் மற்றும் படப்பிடிப்பு நடத்துவோர் காவல் நிலையங்களை வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம் என்றும் அரசின் செலவைக் குறைக்கும் நடவடிக்கை இது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், போலீஸ் இன்ஸ்பெக்டரை விட மோப்ப நாய்க்கு வாடகை அதிகமாக இருக்கிறது. ஆனால், அதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. காவல்துறையின் இந்த முடிவுக்கு பொதுமக்களும், அரசு அதிகாரிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இருப்பினும், அரசின் நிதி நெருக்கடியை சரி செய்வதற்கான திட்டம் இது என்று காவல்துறை தரப்பு விளக்கம் அளித்துள்ளது.

Chella

Next Post

இளம் வயதிலேயே மூட்டு வலி வருகிறதா....? அப்படியென்றால் இதை குடித்து பாருங்கள்.....!

Thu Sep 21 , 2023
முன்பெல்லாம் வயதான நபர்களுக்கு தான் மூட்டு வலி வரும்.  அப்படி வயதான நபர்களுக்கு மூட்டு வலி வந்தால், அவர்கள் அதனை போக்குவதற்காக பல்வேறு மருத்துவங்களை செய்வார்கள். ஆனாலும், அவர்களால், அந்த மூட்டு வலியில் இருந்து கடைசி வரை விடுபட முடியாது. இந்த மூட்டு வலி வருவதற்கு காரணம், எலும்பு தேய்மானம் தான் என்று கூறப்படுகிறது. இது வயதானவர்களுக்கு சரிதான். ஆனால், இளம் வயதில் இருப்பவர்களுக்கு கூட, தற்போது மூட்டு வலி […]

You May Like