ரெடியா..? பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மார்ச் 24-ம் வரை…! வெளியான புதிய அறிவிப்பு…!

10-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான அறிவியல் பாட செய்முறைத் தேர்வு வரும் மார்ச் 20-ம் தேதி முதல் 24-ம் தேதி வரையில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அரசு தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான அறிவியல் பாட செய்முறைத் தேர்வு வரும் மார்ச் 20-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், 2023-ம் ஆண்டு 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத தனித்தேர்வர்களாக விண்ணப்பித்த மாணவர்களும் கலந்து கொண்டு கட்டாயம் தேர்வு எழுத வேண்டும்.

அதேபோல் ஏற்கனவே அறிவியல் பாட செய்முறைத் தேர்வெழுதி அதில் தேர்ச்சிபெறாத தனித்தேர்வர்களும் இந்த செய்முறைத் தேர்வில், தவறாமல் கலந்து கொண்டு தேர்வு எழுத வேண்டும். அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி வகுப்புகள் நடைபெற்ற பள்ளிகளிலேயே தனித்தேர்வர்கள் தேர்வு எழுத வேண்டும். அறிவியல் பாட செய்முறைத் தேர்வு நடைபெறவுள்ள தேதி குறித்து, அறிவியல் செய்முறைப் பயிற்சி பெற்ற பள்ளியிலிருந்து அறிவிப்பு ஏதும் கிடைக்கப் பெறாதவர்கள், இந்த அறிவிப்பு மூலம் தெரிந்து கொண்டு, அந்தப் பள்ளியின் அலுவலரை சந்தித்து, அறிவியல் பாட செய்முறைத் தேர்வில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது..

Vignesh

Next Post

கே.எல்.ராகுலின் நிலையை நானும் சந்தித்திருக்கிறேன்!... கழிவறையில் அழுதிருக்கின்றேன்!... தினேஷ் கார்த்திக் உருக்கமான பேச்சு!

Wed Feb 22 , 2023
மோசமான பேட்டிங் காரணமாக கே.எல்.ராகுல் சந்திக்கும் கடுமையான விமர்சனங்களை தானும் சந்தித்ததாக இந்திய அணியின் தினேஷ் கார்த்திக் உருக்கமாக பேசியுள்ளார். காயம் மற்றும் அறுவை சிகிச்சையால் பெரிதும் பாதிக்கப்பட்ட இந்தியா அணியின் தொடக்க ஆட்டக்காரராக விளங்கிவரும் கே.எல்.ராகுல், கடந்த ஆண்டு பல்வேறு போட்டிகளில் விளையாடவில்லை. மேலும், மோசமான ஆட்டம் காரணமாக டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் நீக்கப்பட்டார். மேலும், டி20 துணை கேப்டன் பொறுப்பையும் இழந்த கே.எல்.ராகுல், டி20 அணியில் வீரர்கள் […]

You May Like