படகு போட்டியில் கலந்து கொண்ட காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி ….

கேரளாவில் நடைபயணம் மேற்கொண்டுள்ள நிலையில் அங்கு நடந்த படகு போட்டியில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி உற்சாகமாக கலந்து கொண்டார்.

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 3 ஆயிரத்து 500 கி.மீ. தூரம் நடைபயணத்தை காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி புதன்கிழமை கன்னியாகுமரியில் தொடங்கினார். களியக்காவிளை அருகே உள்ள தலச்சன் விளையில் கடந்த சனிக்கிழமை தமிழக பயணத்தை நிறைவு செய்தார். அவர் கன்னியாகுமரியில் 4 நாட்களில் 56 கி.மீ. தூரம் கடந்தள்ளார்.

தமிழகத்தில் யாத்திரை நிறைவு பெற்றதை அடுத்து ராகுல்காந்தி கார் மூலம் தமிழகம் – கேரள எல்லைக்கு வந்து கடந்த ஞாயிறு அன்று காலை காரில் புறப்பட்டு பாசாலை பகுதிக்கு சென்று அங்கிருந்து நடைபயணத்தை தொடங்கினார். கேரளாவில் 19 நாட்கள் நடைபயணம் மேற்கொள்கின்றார்.

இதையடுத்து , கேரளாவின் ஆலப்புழா புன்னமடம் பகுதியில் ’’பாம்பு படகு போட்டி’’ நடைபெற்றது இப்போட்டியில் ராகுல்காந்தியும் பங்கேற்று உற்சாகமாக  உற்சாகமாக படகு ஓட்டினார்.

Next Post

சம்பளம் கேட்டதற்காக இளைஞரை செருப்பு, பெல்ட்டால் கடுமையாக தாக்கிய இளம்பெண்கள்..! வைரல் வீடியோ..!

Mon Sep 19 , 2022
சம்பளம் கேட்ட கார் ஓட்டுனரை டிராவல்ஸ் நிறுவன பெண் ஊழியர்கள் கடுமையாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் சுவாமி விவேகானந்தர் சர்வதேச விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த பகுதியில் ராகுல் என்ற தனியார் டிராவல்சில் கார் டிரைவராக பணியாற்றி வருபவர் தினேஷ். இவருக்கு மே மற்றும் ஜூன் மாதத்திற்கான சம்பளப் பணம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், ராய்ப்பூர் விமான நிலையம் அருகே […]
சம்பளம் கேட்டதற்காக இளைஞரை செருப்பு, பெல்ட்டால் கடுமையாக தாக்கிய இளம்பெண்கள்..! வைரல் வீடியோ..!

You May Like