ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கம்..! எந்தெந்த வழித்தடங்கள் தெரியுமா..?

ஓணம் பண்டிகையை முன்னிட்டு 5 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ”கேரள மாநிலம் எா்ணாகுளத்தில் இருந்து செப்டம்பா் 1ஆம் தேதி இரவு 10 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரெயில் மறுநாள் மதியம் 12 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தை சென்றடையும். பின்னர், அங்கிருந்து செப்டம்பா் 2ஆம் தேதி மாலை 3.10 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரெயில் மறுநாள் காலை 3 மணிக்கு எா்ணாகுளம் சென்றடையும். இந்த ரெயிலானது, ஆலுவா, திருச்சூா், பாலக்காடு, போத்தனூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும்.

ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கம்..! எந்தெந்த வழித்தடங்கள் தெரியுமா..?

தாம்பரத்தில் இருந்து செப்டம்பா் 2ஆம் தேதி பிற்பகல் 1.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் மறுநாள் காலை 6.45 மணிக்கு மங்களூர் ரெயில் நிலையத்தை சென்றடையும். பின்னர், அங்கிருந்து செப்டம்பா் 3ஆம் தேதி காலை 10 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரெயில் மறுநாள் காலை 4 மணிக்கு தாம்பரத்தை சென்றடையும். இது சென்னை எழும்பூா், பெரம்பூா், அரக்கோணம், காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா், கோவை, பாலக்காடு, ஒட்டப்பாலம், சொரனூா், குட்டிபுரம், திரூா், கோழிக்கோடு, வடகரை, தலச்சேரி, காசா்கோடு உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கம்..! எந்தெந்த வழித்தடங்கள் தெரியுமா..?

தாம்பரத்தில் இருந்து செப்டம்பா் 4ஆம் தேதி பிற்பகல் 2.15 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரெயில் மறுநாள் பகல் 12 மணிக்கு கொச்சுவேலி ரெயில் நிலையத்தை சென்றடையும். கொச்சுவேலியில் இருந்து செப்டம்பா் 5ஆம் தேதி பிற்பகல் 2.30 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரெயில் மறுநாள் காலை 10.55 மணிக்கு தாம்பரத்தை சென்றடையும். இந்த ரயில் சென்னை எழும்பூா், பெரம்பூா், அரக்கோணம், காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா், கோவை, பாலக்காடு, ஒட்டப்பாலம், திருச்சூா், ஆலுவா, கொல்லம் உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

நாகா்கோவிலில் இருந்து செப்டம்பா் 11ஆம் தேதி மாலை 5.50 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரெயில் மறுநாள் பகல் 12.30 மணிக்கு சென்னை எழும்பூா் ரெயில் நிலையத்தை சென்றடையும். இந்த ரெயிலானது, திருவனந்தபுரம், கொல்லம், காயன்குளம், கோட்டயம், எா்ணாகுளம் டவுன், ஆலுவா, திருச்சூா், பாலக்காடு, கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூா் உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். கொச்சுவேலியில் இருந்து செப்டம்பா் 11ஆம் தேதி மாலை 5 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரெயில் மறுநாள் காலை 10.10 மணிக்கு கா்நாடக மாநிலம், பெங்களூரு அருகே உள்ள பையப்பனஹள்ளி ரெயில் நிலையத்தை சென்றடையும்.

பையப்பனஹள்ளியில் செப்டம்பா் 12ஆம் தேதி, மாலை 3 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரெயில் மறுநாள் காலை 6.35 மணிக்கு கொச்சுவேலி ரெயில் நிலையத்தை சென்றடையும். இந்த சிறப்பு ரெயில் கொல்லம், காயன்குளம், கோட்டயம், எா்ணாகுளம் டவுன், ஆலுவா, திருச்சூா், பாலக்காடு, கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம், பங்காரப்பேட்டை, கிருஷ்ணராஜபுரம் உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

மத்திய அரசின் திடீர் முடிவால் விமான கட்டணம் உயரும் அபாயம்..! பயணிகள் கவலை..!

Thu Aug 11 , 2022
விமான பயணிகளிடம் கட்டணம் வசூலிப்பது தொடர்பான கட்டுப்பாட்டை மத்திய அரசு நீக்க முடிவு செய்துள்ளதால், இனி விமான சேவை நிறுவனங்கள் தங்கள் விருப்பம் போல கட்டணத்தை நிர்ணயிக்கும் சூழல் உருவாகியுள்ளது. கொரோனா பரவல் கட்டுக்குள் வந்த போது 2020ஆம் ஆண்டு மே 25ஆம் தேதி மீண்டும் விமானங்கள் இயக்க அனுமதி அளிக்கப்பட்டது. அப்போது, பயண நேரத்தின் அடிப்படையில் கட்டணத்தின் மீது உச்ச வரம்பு நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி 40 நிமிடங்களுக்கு குறைவான […]

You May Like