’பட்டாசு கடை, ஆலைகள் மீது கடும் நடவடிக்கை’..!! அமைச்சர் தங்கம் தென்னரசு அதிரடி..!!

விதிமீறல்கள் இருக்கும் பட்டாசு கடை மற்றும் பட்டாசு ஆலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு எச்சரித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஆட்சியாளர் ரயில்வே மேம்பாலம் கட்டுவதற்கான
பணிகள் குறித்து நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ஆட்சியர் ஜெயசீலன், சட்டமன்ற உறுப்பினர் அசோகன், மேயர் சங்கீதா இன்பம் ஆகியோர் ஆய்வு
மேற்கொண்டனர்.

இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, சிவகாசி சாட்சியாபுரம் ரயில்வே மேம்பால பணிகள் விரைவில் துவங்கப்பட உள்ளது. ரயில்வே மேம்பாலம் கட்டுவதற்கான இடம் கையகப்படுத்தும் பணி முழுவதுமாக முடிந்து விட்டது. ரூ.64 கோடி மதிப்பீட்டில் பாலம் கட்டும் பணிகள் விரைவில் துங்கப்பட இருக்கிறது.

பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் சிரமப்படாத வகையில், பணிகள் மேற்கொள்ளப்படும். பட்டாசு கடை மற்றும் ஆலைகளில் விதிமீறல்கள் இருக்கும் எனில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். கடந்த 2 நாட்களாக சிவகாசி பகுதிகளில் அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

”சாதிவாரியான கணக்கெடுப்பை உடனே நடத்துங்கள்”.!! பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்..!!

Sat Oct 21 , 2023
தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரியான கணக்கெடுப்பினை இணைத்து நடத்த வேண்டுமென பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”இந்தியாவில் சமூக நீதியை நிலைநாட்டி, வளர்ச்சியின் பலன்களை மிகவும் பாதிக்கப்படக்கூடிய பிரிவினருக்குக் கொண்டு செல்வதற்கும், வலிமையான, அனைவரையும் உள்ளடக்கிய இந்தியாவை உருவாக்குவதற்கும் ஏதுவாக, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புடன், விரிவான சாதிவாரிக் கணக்கெடுப்பை இணைத்து நடத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க […]

You May Like