‘விவசாயிகளுக்கு பரிசாக டிராக்டர்’..!! தமிழ்நாடு அரசுக்கு வலுக்கும் கோரிக்கை..!!

தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் வாக்குச்சாவடி செயல் வீரர்கள் கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”காவிரி உபநீர் திட்டத்தை தமிழ்நாடு அரசு நிறைவேற்ற வேண்டும். ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்தும் உயிர் பலி தொடர்கிறது. ஸ்டெர்லைட் ஆலையை எக்காரணத்தை கொண்டும் திறக்க கூடாது. இதனால் இரண்டு லட்சம் பேர் பாதிக்கப்படுவார்கள்.

ஜல்லிக்கட்டு போட்டியில் அரசு பரிசு அறிவிக்கிறது. காரை வைத்து விவசாயியால் என்ன செய்ய முடியும். அதற்கு பதிலாக டிராக்டர் வாங்கிக் கொடுங்கள். விவசாயம் சார்ந்த பரிசுப் பொருட்களை கொடுக்க வேண்டும். அதன் மூலம் வருமானம் கிடைக்கும். ஜல்லிக்கட்டை திட்டமிட்டு பாதுகாப்பு ஏற்பாட்டுடன் நடத்திட வேண்டும். பாலக்கோடு பகுதியில் தக்காளி விளைச்சல் அதிகம் உள்ளது. குளிர்பதன கிடங்கு அமைக்கவும், பதப்படுத்தவும், மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிக்கவும் திட்டங்களை
கொண்டு வரவேண்டும்” என்றார்.

Chella

Next Post

பெற்றோர்களே.! குழந்தைகளுக்கு தற்கொலை எண்ணம், கோபம் வர முக்கிய காரணம் என்ன தெரியுமா.?

Tue Jan 9 , 2024
நவீன காலகட்டத்தில் பலருக்கும் நேரமின்மை என்பது மிகப்பெரும் பிரச்சனையாக இருந்து வருகிறது. தற்போது பலரது வீட்டிலும் தாய், தந்தை இருவரும் வேலைக்கு செல்லும் சூழ்நிலையில் குழந்தைகளை வளர்ப்பது என்பது மிகவும் கடினமான செயலாக மாறிவிட்டது. இது போன்ற நிலைகளில் குழந்தைகளுக்கு போன் கொடுத்து பழக்கப்படுத்துவது பலரது வீடுகளிலும் சாதாரணமாக நடந்து வருகிறது. ஆனால் குழந்தைகள் சிறு வயதில் இருந்து போன் பார்ப்பதினால் ஏற்படும் பாதிப்புகளை மருத்துவர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். […]

You May Like