வாக்காளர் அடையாள அட்டை..!! இ-சேவை மையங்களில் நிறுத்தம்..!! தலைமை தேர்தல் அதிகாரி தகவல்..!!

இ – சேவை மையங்களில் வாக்காளர் அட்டை வழங்கும் பணி நிறுத்தப்பட்டுள்ளது என்றும், நேரடியாக வீடுகளுக்கே விநியோகம் செய்யப்படுவதாகவும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், ”வாக்காளர் பட்டியலுடன் ஆதார் இணைப்புக்கான காலகட்டத்தை ஓராண்டுக்கு தேர்தல் ஆணையம் நீட்டித்துள்ளது. முன்பெல்லாம் ஆண்டுக்கு ஒரு முறை மட்டும், வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி நடந்து வந்தது. ஆனால், இப்போது 4 மாதங்களுக்கு ஒரு முறை, வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. அந்தவகையில், இப்போதைய ஆண்டில் 4 காலாண்டிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் ஆகியவை நடைபெற்று வருகிறது.

வாக்காளர் அட்டையில் பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் ஒரே மாதிரியான அட்டை அச்சிடப்படுகிறது. அதனால், புதிய வாக்காளர்கள் அனைவருக்கும், தேர்தல் கமிஷன் நியமித்துள்ள நிறுவனம் சார்பில், வாக்காளர் அச்சிடப்பட்டு மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு அனுப்பப்படும். அவர்கள் தபாலில் வாக்காளர்கள் வீடுகளுக்கு அனுப்புவார்கள். வாக்குச்சாவடி அலுவலர்கள் வழியாக வினியோகிப்பதும் பல்வேறு புகார்கள் காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது.

புதிய வாக்காளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய வண்ண வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன. முன்னதாக வாக்காளர் அடையாள அட்டைகள், அரசின் இ-சேவை மையங்கள் மற்றும் இணைய சேவை மையங்களில் பெறும் வசதி இருந்தது. இப்போது புதிய அட்டைகள் பாதுகாப்பு அம்சங்களுடன் வழங்கப்படும் நிலையில், இணைய மையங்களில் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது.

அதேபோல போலி அட்டைகளை தடுக்கும் வகையில், இந்த புதிய அட்டைகளின் உட்புறத்தில் ஹோலோகிராம், கோஸ்ட் இமேஜ் என்ற நவீன வசதி, க்யூஆர் கோடு உள்ளன. இந்த அட்டைகளை இ-சேவை மையங்களால் அச்சிட்டு வழங்க இயலாது. இதனால், தேர்தல் ஆணையமே நேரடியாக வழங்க முடிவெடுத்துள்ளது. வாக்காளர் அடையாள அட்டையைப் பெற தேர்தல் ஆணையத்தின் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

புதிய வாக்காளர்கள், முகவரி, பெயர் உள்ளிட்ட விவரங்கள் மற்றும் புகைப்படங்களை திருத்தம் செய்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு அட்டை விநியோகிக்கப்படுகிறது. புதிய அட்டை கோரி விண்ணப்பிப்பவர்களுக்கு தேவை அடிப்படையில் விநியோகிக்கப்படுகிறது. அட்டையை தொலைத்தவர்களும் விண்ணப்பிக்கலாம். புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு இலவசமாகவே வழங்கப்படுகிறது” என்றார்.

Chella

Next Post

வடிவேலுவின் நடவடிக்கை சரியில்லை..!! பிரபல காமெடி நடிகர் ஓபன் டாக்..!! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

Sat Jun 10 , 2023
தமிழ் சினிமாவில் மிக முக்கியமான அடையாளமாக விளங்கியவர் வடிவேலு. இவர், சினிமாவில் இருந்து விலகி இருந்த காலகட்டத்தில் கூட மீம் கிரியேட்டர்களுக்கு கட்சிதமாக பொருந்தினார். தன்னை தானே கலாய்த்து கொள்வாரே தவிர யாரையும் நோகடிக்கும் வகையில் அவரது நகைச்சுவை இருக்காது. இது அவரிடம் இருந்த ஒரு பிளஸ் பாயிண்ட். அவரின் ஸ்பான்டேனியஸ் ரியாக்ஷனை, பாடி லாங்குவேஜை ரசிகர்களால் ஒருபோதும் மறக்க முடியாது. 4 ஆண்டுகள் இடைவேளைக்கு பிறகு வடிவேலு ‘நாய் […]

You May Like