பிரபல நடிகை ராஷிகண்ணா தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட பல மொழிப்படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர் பட்டாளத்தை பெற்றவர். இமைக்கா நொடிகள் படத்தில் நயன்தாராவின் தம்பியாக வரும் அதர்வாவுக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடித்திருந்தார். அதனை தொடர்ந்து நடிகர் தனுஷின் திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் நடித்து புகழ் பெற்றார்.
டெல்லியை சேர்ந்த ராஷி கன்னா அங்கு பள்ளிப் படிப்பை முடித்து ஆங்கில இலக்கியத்தில் பட்டப்படிப்பு பெற்றார். ராசி கண்ணா சின்ன வயதில் இருந்தே படிப்பின் மீது ஆர்வம் கொண்டவர். பிளஸ் டூ தேர்வில் முதலிடம் பெற்றார். டெல்லி பல்கலைக்கழகத்தின் Lady Shriram Collegeல் அவர் படிப்பில் டாப்பில் வந்திருக்கிறார். மேலும் அதன் பின் UPSC தேர்வுக்கு தீவிரமாக தயாராகி வரும்போது பார்ட் டைமில் ஒரு ad ஏஜென்சியில் copywriter ஆக அவர் பணியாற்றினாராம்.
இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், “நான் ஸ்கூல் காலேஜில் படிப்பாளியாக இருந்தேன். என் அப்பாவுக்கு நான் ஐஏ.ஏஸ் ஆக வேண்டும் என்று ஆசை இருந்தது. நானும் எனக்கு படிப்பில் ஆர்வம் அதிகம் என்பதால் ஐ.ஏ.எஸுக்காக படித்துக் கொண்டிருந்தேன். நண்பர் ஒருவருடன் மும்பை சென்றிருந்தபோது எனக்கு முதல் படத்தின் ஆடிஷனுக்கான அழைப்பு வந்தது. நான் சில முறை மறுத்தும் எனக்கு அழைப்பு வந்தது.
பின் ஒருவர் ஃபோன் செய்து இத்தனை முறை கூப்பிட்ட மரியாதைக்காவது ஒரு முறை வந்து ஆடிஷன் கொடுத்துவிட்டு மட்டும் போக சொன்னார். நாம் செலக்ட் ஆகவாப்போறோம் என்று ஆடிஷன் குடுத்திட்டு வந்தேன். நான் செலக்ட் ஆகிவிட்டேன். ஆனால் நான் ஐ.ஏ.எஸ் ஆகவேண்டு என்கிற கனவு அப்படியே நின்றுவிட்டது. எனக்கு பிடித்த வாக்கியம் ஒன்று இருக்கிறது ‘Fate Leads the Willing and Drags the Reluctant’ என்று. விதிகிட்ட நான் சரண்டர் ஆக தயாராக இருந்தேன்.
சினிமா எனக்கு ஈஸியாக கிடைத்திருக்கலாம் இது தான் உலகத்திலேயே மிக நிலையே இல்லாத வேலை. சில நேரம் உங்களுக்கு அடுத்த படத்திற்கான வாய்ப்பு எப்போது வரும் என்று தெரியாது. மாதக்கணக்கில் எந்த வேலையும் இல்லாமல் காத்திருக்க வேண்டும். எனக்கு கிடைத்த ஒவ்வொரு வாய்ப்புகளையும் பயண்படுத்தி தான் இந்த இடத்திற்கு உங்கள் முன் வந்திருக்கிறேன். ” என்று பேசினார்.
பொதுவாக சினிமா நடிகைகள் என்றால் நடிப்புக்காக படிப்பை பாதியில் விட்டவர்களாக தான் இருப்பார்கள். ஆனால் நடிகை ராசி கண்ணாவின் படிப்பு பற்றிய தகவல் தற்போது சினிமா ரசிகர்கள் எல்லோருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்திருக்கிறது.
Read more: எமனாக வந்த நாய்.. தந்தை கண் முன்னே 4 வயது சிறுவன் துடிதுடித்து பலி..!! கடலூரில் சோகம்..