தவெக தலைவர் விஜய் கடந்த 13-ம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.. சனிக்கிழமைகளில் பிரச்சாரம் செய்து வரும் அவர் இன்று மதியம் நாமக்கல்லில் சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரம் செய்தார்.. அந்த வகையில் நாமக்கலை தொடர்ந்து விஜய், கரூர் சென்றார்.. கரூர் வேலுச்சாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய் தொண்டர்கள் மற்றும் மக்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.. விஜய் பேசிக் கொண்டிருந்த போதே பலர் மயக்கமடைந்தனர்.
விஜய் பேசிவிட்டு கிளம்பிய பின்னர் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி பலர் மயக்கமடைந்த நிலையில் அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.. எனினும் முதலில் 4 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்டது.. பலர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 33ஆக உயர்ந்துள்ளது. மேலும் சிலர் ஆபத்தான நிலையில் இருப்பதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் நாளை கரூர் செல்ல உள்ளார்..