போக்குவரத்து விதிமீறல் அபராதம் தொடர்பாக வரும் போலி மெசேஜ்கள் மற்றும் போலி சைபர் ஹெல்ப் டெஸ்க் அழைப்புகள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று சென்னை சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
பைக் அல்லது கார் வைத்திருப்பவர்களுக்கு “Parivahan e-Challan” என்ற பெயரில் வாட்ஸ்அப் மெசேஜ் வரும். “நீங்கள் போக்குவரத்து விதிகளை மீறிவிட்டீர்கள், அபராதம் கட்ட வேண்டும்” எனக் கூறப்படும். உண்மையான காவல்துறை மெசேஜ்களில், Google Play Store-இல் கிடைக்கும் mParivahan செயலியின் லிங்க் இருக்கும். ஆனால் மோசடிக்காரர்கள் அனுப்பும் மெசேஜில், APK (புறநிலை செயலி) லிங்க் இருக்கும். இது Play Store-இல் கிடைக்காது; Chrome வழியாகவே பதிவிறக்க சொல்லப்படும்.
APK கோப்புகளை நிறுவினால் மொபைல் SMS, தொடர்பு எண்கள், வங்கி விவரங்களை அணுக அனுமதி கேட்கும். அனுமதி அளித்தால், OTPகளைப் பயன்படுத்தி வங்கி கணக்கிலிருந்தே பணம் திருடப்படலாம். பணம் காலியான பிறகே பாதிக்கப்பட்டவர்கள் ஏமாந்ததை உணர முடியும்.
எனவே போக்குவரத்து விதிமீறல் அபராதங்களை, அரசின் அதிகாரப்பூர்வ வலைத்தளங்கள் அல்லது கூகிள் பிளே ஸ்டோரில் கிடைக்கும் அரசு செயலி மூலம் மட்டுமே கட்ட வேண்டும் சரிபார்க்க வேண்டும் என்று காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. APK அப்ளிகேஷன்களை ஒருபோதும் இன்ஸ்டால் செய்ய வேண்டாம் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர். இரண்டாவது மோசடி “சைபர் ஹெல்ப் டெஸ்க் அழைப்பு” மோசடி ஆகும். இதில், மோசடிக்காரர்கள் சைபர் கிரைம் உதவி மைய முகவர்களாகவோ அல்லது சட்ட வல்லுநர்களாகவோ நடித்து, ஏற்கனவே பணம் இழந்தவர்களை அணுகுகிறார்கள்.
அபராதம் செலுத்த வேண்டுமெனில் அரசின் அதிகாரப்பூர்வ வலைத்தளங்கள் அல்லது Play Store-ல் உள்ள அரசு ஆப்ஸ் மூலமாக மட்டுமே செலுத்த வேண்டும். APK கோப்புகளை ஒருபோதும் இன்ஸ்டால் செய்யக்கூடாது. பணம் இழந்தவர்கள் 1930 என்ற தேசிய ஹெல்ப் லைன் எண்ணிலோ அல்லது cybercrime.gov.in என்ற வலைத்தளத்திலோ இலவசமாக புகார் அளிக்கலாம்.
Read more: அடிமேல் அடி வாங்கும் இபிஎஸ்.. இப்படியே போனால் அதிமுக நிலைமை..? பாஜக மேலிடம் போடும் மாஸ்டர் பிளான்..!