ஓஹியோ விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் ஒரு சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் ஆறு பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஓஹியோ விமான நிலையத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை காலை யங்ஸ்டவுன்-வாரன் பிராந்திய விமான நிலையம் அருகே ஆறு பேருடன் செஸ்னா 441 விமானம் மொன்டானாவின் போஸ்மேனு சென்றுக்கொண்டிருந்தது. புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விமானம் விபத்துக்குள்ளானதாக மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் மற்றும் மீட்பு குழுவினர், மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
மேலும் இந்த விபத்தில் யாரும் உயிர் பிழைக்கவில்லை என்று மேற்கு ரிசர்வ் துறைமுக ஆணையத்தின் நிர்வாக இயக்குனர் அந்தோணி ட்ரெவேனா செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். பாதிக்கப்பட்டவர்கள் ட்ரம்புல் கவுண்டி கரோனர் அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக ட்ரெவேனா கூறினார்,
மேலும், விபத்து நடந்த இடத்திற்கு செல்வது கடினமாக இருந்தது என்று ஹவுலேண்ட் டவுன்ஷிப் தீயணைப்புத் துறைத் தலைவர் ரேமண்ட் பேஸ் கூறினார். “நாங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். இது மிகவும் துயரமான சூழ்நிலை, ஆனால் இன்னும் மோசமாக இருந்திருக்கலாம்,” என்று பேஸ் கூறினார், விமானம் விபத்துக்குள்ளான இடத்திற்கு அருகில் மூன்று வீடுகள் இருந்ததைக் குறிப்பிட்டார்.