கரூர் மாவட்டம் தென்னிலை பகுதியில் இயங்கி வரும் கல்குவாரி ஒன்றிலிருந்து எம். சான்ட் மணலை ஏற்றிக்கொண்டு ஒரு மினி லாரி கரூர் நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. இன்று அதிகாலை சுமார் 4 மணியளவில், லாரி கரூர் – தென்னிலை சாலையின் கடைவீதிப் பகுதி அருகே வந்தபோது, எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில், லாரியில் பயணம் செய்த வடமாநிலத் தொழிலாளர்களான சிக்கந்தர், பிரபாகரன் மற்றும் அஜய் ஆகிய மூவரும் லாரியின் அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், லாரியின் ஓட்டுநர் சந்திரகுமார் மற்றும் கிளீனர் ஜேம்ஸ் ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர்.
பின்னர், இந்த விபத்து குறித்துத் தகவல் கிடைத்ததும், தென்னிலை காவல் நிலையத்தைச் சேர்ந்த அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இதையடுத்து, விபத்தில் பலியானவர்களின் சடலங்களை மீட்ட போலீசார், அவற்றை உடற்கூறாய்வுக்காக கரூர் அ
ரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த ஓட்டுநர் மற்றும் கிளீனர் ஆகிய இருவரும் உடனடியாக மீட்கப்பட்டு, கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து தென்னிலை போலீசார் வழக்குப் பதிவு செய்து, விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Read More : தம்பதிகளே..!! படுக்கையறையில் உங்கள் துணையுடன் இப்படி தூங்குறீங்களா..? உஷார்..!!



