தமிழ்நாட்டில் புத்தாண்டு நாளில் சோகம்.. அரசுப் பேருந்து மோதி விபத்து.. 2 பேர் பலி..!

1557133 accident 2

தமிழகத்தில் சமீபத்தில் அரசுப் பேருந்துகள் விபத்துகளில் சிக்கி வரும் சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. கடந்த 24-ம் தேதி கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே அரசுப் பேருந்து டயர் வெடித்து இரண்டு கார்கள் மீது மோதியதில் 9 பேர் உயிரிழந்தனர்.


அதே போல் கடந்த நவம்பர் மாதம் சிவகங்கையில் இரண்டு அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 10 பேர் பலியான சம்பவம் என அரசு பேருந்து விபத்து சம்பவங்கள் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளன.. இந்த விபத்துகள் அரசுப் பேருந்து பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.. மேலும், பேருந்துகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

இந்த நிலையில் புத்தாண்டு நாளான இன்று அரசுப் பேருந்து மோதி 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் இருந்து துறையூர் சென்று கொண்டிருந்த பேருந்து நல்லாம்பாளையம் பகுதியில் கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.. இந்த விபத்தில் காரில் இருந்த 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழண்டஹ்னர்..

இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், உடனடியாக அங்கு சென்ற போலீசார் 2 பேரின் உடல்களை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..

Read More : விஜய்க்கு அடுத்த சிக்கல்? திடீரென செங்கோட்டையனை முற்றுகையிட்ட தவெகவினர்.. உச்சக்கட்ட பரபரப்பு..

RUPA

Next Post

அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்..! பொங்கல் போனஸ் அறிவிப்பை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்..!

Fri Jan 2 , 2026
2024-25-ம் ஆண்டுக்கான  C, D பிரிவு பணியாளர்களுக்கு மிகை ஊதியம் வழங்க நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழக அரசு இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள், இந்தியத் திருநாட்டிற்கே வழிகாட்டக்கூடிய வகையில், பள்ளிக்கல்வி தொடங்கி உயர்கல்வி வரை. வேளாண் வளர்ச்சி முதல் தொழில்துறை வளர்ச்சி வரை, பள்ளி சிறார்களுக்கு காலை உணவு தொடங்கி, அவர்தம் ஆற்றலையும் அறிவினையும் பெருக்கிட […]
stalin money

You May Like