இந்திய ரயில்வே ரயிலில் நடைபெற்ற அதிர்ச்சிகரமான ஒரு சம்பவம் மீண்டும் இணையத்தில் வைரலாகியுள்ளது. ஒரு பயணி ரூ.110 என விலை நிர்ணயிக்கப்பட்ட உணவு தட்டிற்கு (Thali) ரூ.130 செலுத்த மறுத்ததால், உணவக (catering) ஊழியர்கள் அந்தப் பயணியை கொடூரமாக அடித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவியுள்ளது. வீடியோ பழையதாக இருந்தாலும், இந்த சம்பவம் பயணிகளிடையே கடும் கோபத்தையும், ரயில்வே உணவுப் பிரிவு முறைகேடுகள் மற்றும் பாதுகாப்பு குறித்த கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
வைரலான வீடியோவில் என்ன நடந்தது?
வீடியோவில், ரயில் பெட்டிக்குள் ஊழியர்கள் ஒரு பயணியை பெல்ட் கொண்டு தாக்கும் காட்சி தெளிவாக தெரிகிறது. இந்த காட்சி சமூக வலைதளங்களில் கோடிக்கணக்கான முறை பார்வையிடப்பட்டுள்ளது. பயனர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டு, ரயில்வே அமைச்சகம், அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் மற்றும் இந்திய அரசை குறித்துப் பதிவிட்டுள்ளனர், சம்பந்தப்பட்டவர்களுக்கு கடும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளனர்.
சமூக வலைதளங்களில் எதிர்வினைகள்
ஒரு பயனர் “இந்த நிறுவனத்துடன் உள்ள உணவக ஒப்பந்தத்தை உடனே ரயில்வே ரத்து செய்ய வேண்டும்.” என்று பதிவிட்டுள்ளார்.
மற்றொருவர் “இது தான் இந்திய ரயில்வேயின் சிறப்பு!” என்று கிண்டலாக பதிவிட்டுள்ளார்.
மூன்றாவது பதிவில் ஒருவர் : “அதிக விலை வசூல், தரமற்ற உணவு — இவை ரயில்வேயில் வழக்கமானவை. இதை நிறுத்தும் நாள் எப்போது வரும்?” என்று குறிப்பிட்டுள்ளார்..
முந்தைய சம்பவங்கள்
ரயில்வே இது போன்ற சம்பவங்கள் நடைபெறுவது.. இது முதன்முறையல்ல.. இதுபோன்ற பல வழக்குகள் ஏற்கனவே பதிவாகியுள்ளன.
ஜூலை 21, 2025 — 11463 ரயிலில் ஒரு பயணி உணவு மற்றும் தண்ணீருக்கு அதிக விலை வசூலித்ததாக புகார் செய்தபோது, பேன்ட்ரி ஊழியர்கள் அவரை அடித்த சம்பவம் நடந்தது. அந்த வீடியோவும் வைரலானது.
ஜூன் 26, 2025 — மற்றொரு பயணி ₹20 மதிப்புள்ள தண்ணீர் பாட்டலுக்கு பில் கேட்டு கேட்டதால், அவரை பேன்ட்ரி காரில் இழுத்துச் சென்று அடித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
அந்த ஊழியர்கள் முதலில் பொருள் விற்பனை செய்ததை மறுத்து, வாக்குவாதம் எழுந்ததும் ஒரு மேலாளர் தனது குழுவினருக்கு பயணியை பலவந்தமாக அழைத்துச் செல்ல உத்தரவிட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
பயணிகள் பாதுகாப்பு குறித்து கேள்வி
இவ்வாறான தொடர்ச்சியான தாக்குதல் சம்பவங்கள், இணைய பயனர்கள் மற்றும் பயணிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் இந்திய ரயில்வே உடனடியாக கடும் நடவடிக்கை எடுத்து, உணவக ஒப்பந்தங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், பயணிகள் பாதுகாப்பு குறித்து கூடுதல் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.
Read More : பயணிகளே உஷார்.. ரயிலில் இந்த தவறுகளைச் செய்தால் அபராதம் விதிக்கப்படும்.. விதிகளை அவசியம் தெரிஞ்சுக்கோங்க..!



