பள்ளி வேன் மீது இரயில் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த அக்கா சாருமதி, தம்பி செழியன் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் அருகே செம்மங்குப்பம் பகுதியில் தனியார் பள்ளி வேன் ரயில்வே கேட்டை கடக்க முயன்றுள்ளது. அப்போது சிதம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்த பயணிகள் ரயில் பள்ளி வேன் மீது மோதி கோர விபத்து நிகழ்ந்துள்ளது. ரயில் மோதி 50 மீட்டர் தூரம் வேன் இழுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
தகவலறிந்து, அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிச் சென்று காயமடைந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். காவல் துறையினருக்கும், ஆம்புலன்ஸுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 6 ஆம் வகுப்பு படிக்கும் நிவாஸ் மற்றும் 11 ஆம் வகுப்பு படிக்கும் சாருமதி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில் பலி எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது.
கடலூர் சின்னகாட்டு சாகை கிராமத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த அக்கா சாருமதி, தம்பி செழியன் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதே பள்ளியில் சாருமதி 11 ஆம் வகுப்பும் தம்பி செழியன் 10 ஆம் வகுப்பும் அடித்து வந்துள்ளான். இந்த நிலையில் இன்று நடந்த விபத்தில் அக்கா தம்பி இருவரும் உயிரிழந்தனர். வேன் ஓட்டுனர் உட்பட பல மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த மாணவர்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தின் மோதி மின்சார கம்பி அறுந்து விழுந்ததில் ரயில்வே கேட் அருகே நின்றிருந்த அண்ணாதுரை என்பவரும் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
Read more: ரயில் மோதிய விபத்தில் 2 பள்ளி மாணவர்கள் பலி.. கேட் கீப்பர் மீது பொதுமக்கள் தாக்குதல்..!!