நடிகரும் தவெக தலைவருமான விஜய் நேற்று (ஜூன் 22) தனது 51வது பிறந்தநாளை கொண்டாடினார். சக நடிகர்களும், தமிழகத்தின் முன்னணி அரசியல் தலைவர்களும் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். விஜய் ரசிகர்களோ அவரின் பிறந்தநாளை திருவிழா போல் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் சக நடிகையும், விஜய்யின் தோழியுமான த்ரிஷா கிருஷ்ணன் விஜய் உடன் இருக்கும் க்யூட்டான அன்சீன் போட்டோவை பகிர்ந்து பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
த்ரிஷாவின் அழகான செல்லப் பிராணியான இஸியை, விஜய் தூக்கிப் பிடித்து, அன்பாக சிரித்துக் கொண்டிருக்கும் ஒரு புகைப்படத்தை அவர் பகிர்ந்துள்ளார்.
அவரின் “மிகவும் சிறந்த நபருக்கு.. பிறந்தநாள் வாழ்த்துக்கள் ” என்று குறிப்பிட்டுள்ளார். த்ரிஷா பகிர்ந்த இந்த போட்டோ விரைவில் வைரலானது. ரசிகர்கள் பலரும் க்யூட் போட்டோ, அழகான ஜோடி என்று கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
தமிழ் சினிமாவின் ஃபேவரைட் ஜோடிகளில் விஜய் – த்ரிஷா ஜோடியும் ஒன்று.. கில்லி (2004), திருப்பாச்சி (2005), ஆதி (2006), குருவி (2008) போன்ற பல படங்களில் இந்த ஜோடியின் கெமிஸ்ட்ரி ரசிகர்களை கவர்ந்தது. எனினும் 2008 க்குப் பிறகு, இந்த ஜோடி திரையில் மீண்டும் ஜோடி சேரவில்லை..
ஆனால் கில்லி படத்தில் இருந்தே விஜய்யும் த்ரிஷாவும் காதலிப்பதாக வதந்திகள் பரவியது. குருவி படத்திற்கு பின்னர் த்ரிஷாவுடன் சேர்ந்து நடிக்கக் கூடாது என்று விஜய்யின் மனைவி சங்கீதா வற்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இருவரும் நண்பர்கள் மட்டுமே என்று கூறினர். எனினும் 15 ஆண்டுகளுக்குப் பிறகு, 2023 இல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான லியோ படத்தில் விஜய் – த்ரிஷா ஜோடி இணைந்தது. ரசிகர்கள் இந்த ஜோடியை கொண்டாடி தீர்த்தனர்.
1999-ம் ஆண்டு விஜய், சங்கீதாவை திருமணம் செய்தார். இந்த ஜோடிக்கு ஜேசன் சஞ்சய் மற்றும் திவ்யா சாஷா என்ற 2 குழந்தைகள் உள்ளனர்..
இதனிடையே, விஜய் தனது பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு சர்ப்பிரைஸ் வழங்கினார். விஜய்யின் கடைசி படமான ஜன நாயகன் படத்தின் முதல் க்ளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டது. ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் விஜய் போலீசாக நடிக்கிறார். இந்த படத்தை முடித்த பின்னர் விஜய் முழு நேர அரசியலில் ஈடுபடப் போவதாக விஜய் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Read More : ஜனநாயகன் கடைசி நாள் ஷூட்டிங்.. எமோஷனல் ஆன விஜய்..!! என்ன நடந்தது..? – மமிதா பைஜூ சொன்ன தகவல்