79 வயதான அதிபர் டிரம்பின் காலில் ஏற்பட்ட வீக்கத்தை பரிசோதனை செய்ததில் அவருக்கு chronic venus insuffiency எனப்படும் நோய் கண்டறியப்பட்டுள்ளது.
வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கடந்த சில நாட்களாக அவரின் கால்களில் வீக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், அதில் Chronic Venous Insufficiency (நாள்பட்ட நரம்பு செயலிழப்பு) என்ற நிலை இருப்பது உறுதியாகியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலை குறித்து மருத்துவர்களின் கூறுகையில், இது ஒருவகை நரம்பு செயலிழப்பு. நம் கால்களில் உள்ள நரம்புகள், கழிந்த ரத்தத்தை மீண்டும் இதயத்திற்கு கொண்டு செல்லும் பணியில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆனால், அவை சரியாக செயல்படாதபோது ரத்தம் கால்களில் தேங்கிவிடுகிறது. இதன் காரணமாக வீக்கம், வலி மற்றும் தோலில் வண்ணமாற்றம் போன்றவை ஏற்படுகின்றன. குறிப்பாக, வயதானவர்களில் இந்த நிலை அதிகம் காணப்படுகிறது.
வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரோலின் லெவிட் வெளியிட்ட தகவலின் படி, “இந்த நோய் ஆபத்தானது அல்ல. உலகளவில் சுமார் 20 பேரில் ஒருவர் இந்த நிலைக்கு ஆளாகின்றனர். 70 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு இது மிகவும் சாதாரணமான ஒரு நிலை” எனக் கூறினார்.
79 வயதான டிரம்ப் தற்போது எந்தவொரு தீவிர சுகாதார பிரச்சனையிலும் இல்லை என்றும், அவரது இதய செயல்பாடுகள் மற்றும் மற்ற மருத்துவ பரிசோதனைகள் அனைத்தும் இயல்பாக உள்ளன என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. Deep Vein Thrombosis (ஆழ்ந்த நரம்பு காயம்) அல்லது தமனி ரத்தக் கொழுப்பு போன்ற ஆபத்தான நிலைகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.
டிரம்பின் கைகளில் காணப்பட்ட சிறிய காயங்களைப் பற்றிய ஊகங்களுக்கு பதிலளித்த லெவிட், இவை அடிக்கடி கைகுலுக்குவதாலும், இதய ஆரோக்கியத்திற்காக ட்ரம்ப் எடுத்து வந்த ஆஸ்பிரின் மருந்தின் பக்கவிளைவுகளாலும் ஏற்பட்டவை என்று விளக்கினார். இந்த நோய் உயிருக்கு ஆபத்தானது இல்லை என்றாலும், கால் வீக்கம், வலி, மற்றும் தோல் நிறமாற்றம் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தலாம். கம்ப்ரஷன் ஸ்டாக்கிங்ஸ் அணிவது, கால்களை உயர்த்தி வைப்பது, உடற்பயிற்சி, மற்றும் எடை குறைப்பு போன்றவை இதற்கு சிகிச்சையாக அளிக்கப்படுகின்றன.
“டிரம்ப் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கிறார். இது அவருடைய செயல்களில் எந்தவொரு தடையும் ஏற்படுத்தவில்லை. அவர் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருப்பார், ஆனால் இது அவரது பொதுநலத்துக்கு எந்தவொரு ஆபத்தும் அல்ல” என்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிகுறிகள்:
- வலி அல்லது சோர்வான கால்கள்
- கால்களில் கூச்ச உணர்வு
- இரவில் கால்களில் பிடிப்பு
- கால்களில் பாதிப்பு இருக்கும் இடம் சிவப்பு பழுப்பு நிறமாக இருப்பது அல்லது தோல் நிறமாற்றம்
- கால்கள் அல்லது பாதங்களில் தோல் உரிதல் அரிப்பு நிலை
- கால்கள் கனமாக இருப்பது
- கணுக்கால் அருகே திறந்த புண்கள். இது சற்று தீவிரமாகும் போது வரும்
வீங்கி பருத்து வலிக்கும் நரம்புகள் - கால்களில் வீக்கம் போன்ற அறிகுறிகள் இருக்கும். டிரம்ப் இந்த கால் வீக்க அறிகுறியை கொண்டிருந்ததாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
Read more: இந்தியா கூட்டணியில் இருந்து ஆம் ஆத்மி விலகல்..!! – கெஜ்ரிவால் அறிவிப்பு