தவெக 2-வது மாநாடு பூமி பூஜையில் எம்மதமும் சம்மதம் எனும் எண்ணத்தைக் பிரதிபலிக்க, விநாயகர், வேளாங்கண்ணி மாதா குழந்தையுடன், மெக்கா பக்திபடம் கூட வைக்கப்பட்டிருந்தது கவனம் ஈர்த்துள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் என்றஅரசியல் கட்சியைத் தொடங்கியுள்ள விஜய், 2026-ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை குறிவைத்து செயல்பட்டு வருகிறார். தேர்தல் களத்துக்குள் விஜய் நேரடியாக இறங்கிவிட்டார் என்பதற்கு அஜித்குமாரின் நீதி போராட்டமே சாட்சி.
சமீபத்தில் செயற்குழு கூட்டத்தை கூட்டினார். 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளராக விஜய் நியமிக்கப்படுவதாக தவெக செயற்குழுவில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. விஜயை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொண்டு தவெக தலைமையில் கூட்டணி அமைக்க ஏற்றுக்கொண்ட கட்சிகளுடன் மட்டும் கூட்டணி வைக்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சட்டமன்ற தேர்தலை சந்திக்கும் விதமாக செப்டம்பர் மாதம் முதல் வாரம் முதல் டிசம்பவர் மாதம் வரை விஜய் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். ஆகஸ்ட் மாதத்தில் கட்சியின் 2 வது மாநாடு நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலைய்யில் மதுரையில் 2 வது மாநில மாநாட்டை நடத்தி தென் தமிழகத்தில் தனது செல்வாக்கை காண்பிக்க திட்டமிட்டுள்ளார். தமிழக வெற்றிக்கழகத்தின் இரண்டாம் ஆண்டு மாநில மாநாடு மதுரை பாரப்பத்தியில் நடைபெற உள்ளதை முன்னிட்டு, இன்று (ஜூலை 16) காலை 5.25 மணிக்கு யாக பூஜையுடன் கால்கோல் விழா தொடங்கப்பட்டது.
விழா துவக்கவிழாவில், சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க யாகம் வளர்க்கப்பட்டு புனித பூஜைகள் நடைபெற்றன. மதுரை பாண்டி முனீஸ்வரர், மடப்புரம் காளி, சமயபுரம் மாரியம்மன், திருப்பரங்குன்றம் முருகன் உள்ளிட்ட பல்வேறு தெய்வங்களின் படங்கள் வைக்கப்பட்டிருந்தன. இதனுடன், எம்மதமும் சம்மதம் எனும் எண்ணத்தைக் பிரதிபலிக்க, விநாயகர், வேளாங்கண்ணி மாதா குழந்தையுடன், மெக்கா பக்திபடம் கூட வைக்கப்பட்டிருந்தது. இது விழாவின் முக்கிய அம்சமாகும்.
முதலில் காலை 4 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த கால்கோல் விழா, மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் 5.10 மணிக்கு நிகழ்விடம் வந்த பிறகு யாக பூஜைகள் நடைபெற்றன. மாநாட்டில் சுமார் 15 லட்சம் தொண்டர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களின் பாதுகாப்புக்காகவும் நல்ல தொடக்கத்திற்காகவும் இந்த யாக பூஜைகள் நடத்தப்பட்டதாக சிவாச்சாரியார்கள் தெரிவித்தனர்.
Read more: முடிவுக்கு வந்த மோதல்.. அன்புமணியை சந்திக்க ‘OK’ சொன்ன ராமதாஸ்..!! கூட்டணி யாருடன் தெரியுமா..?