விஜய் காரை மறித்த அஜிதா தற்கொலை முயற்சி.. விஜய்யை சந்திக்க முடியாத விரக்தியில் விபரீத முடிவு..

tvk ajitha vijay

அரசியல் கட்சிகள் என்றாலே அதில் உட்கட்சி பூசல் இருப்பது சகஜம் தான்.. அந்த வகையில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திலும் கோஷ்டி மோதல் தலைதூக்க தொடங்கி உள்ளது.. இன்று தவெக தலைவர் விஜய் தலைமையில் விடுபட்ட மாவட்ட செயலாளர்களை நியமனம் நடைபெற இருந்தது.. எஞ்சியுள்ள மாவட்ட செயலாளர்களை இன்று விஜய் அறிவிப்பார் என்று கூறப்பட்டது.


தூத்தூக்குடியில் அஜிதா ஆக்னல் என்ற பெண் பணியாற்றி வந்த நிலையில், அவருக்கு பொறுப்பு வழங்காமல் புதிய நபர் ஒருவருக்கு பொறுப்பு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.. இந்த தகவலை அறிந்த அதிருப்தியாளர்கள் நேற்று முன் தினம் தவெக தலைமை அலுவலகத்தில் முகாமிட்டிருந்தனர். எனினும் அவர்கள் தடுத்தி நிறுத்தி வைக்கப்பட்டனர்.. இதனால் விஜய்யின் வருகை தாமதமானது..

பின்னர் அன்று மதியம் சென்னை பனையூரில் உள்ள விஜய் தவெக அலுவலகத்திற்கு வருகை தந்தார்.. அப்போது விஜய்யின் கார் முற்றுகை.யிட்டதால் பரபரப்பு நிலவியது… தூத்துக்குடியை சேர்ந்த தவெக பெண் நிர்வாகி, அஜிதா ஆக்னல் தரப்பினர் காரை மறித்தனர். எனினும் பெண் நிர்வாகியை கண்டுகொள்ளாமல் அலுவலகத்திற்குள் விஜய் சென்றார்.. காரை மறித்தவர்களை மெதுவாக மோதிக் கொண்டே நிற்காமல் சென்றதால் அங்கிருந்தவர் அலறி அடித்து ஓடினர்..

இதையடுத்து கட்சியின் பொதுச்செயலாளரை சந்திக்க வேண்டும் என்று கூறி தர்ணாவில் ஈடுபட்டார்.. எனினும் கட்சி தலைமை அவர் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று அறிவுறுத்தியதால் போராட்டத்தை கைவிட்ட அவர் சாகும் வரை தவெகவில் தான் இருப்பேன் என்று கூறியிருந்தார்..

இந்த நிலையில் அஜிதா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. விஜய்யை சந்தித்து முறையிட வாய்ப்பு கிடைக்காத விரக்தியில் இருந்த அஜிதா தூக்க மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு தற்கொலை முயற்சித்தாக கூறப்படுகிறது.. தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.. அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது..

Read More : “தேமுதிகவுக்கு 6 சீட் என தகவல் கொடுத்த கட்சிக்கு அழிவுகாலம்..” பிரேமலதா சாபம்..!

RUPA

Next Post

இந்த அட்டை உங்களிடம் இருந்தால், நீங்கள் ரூ. 5 லட்சம் வரை இலவச சிகிச்சை பெறலாம்! இதை எப்படிப் பெறுவது?

Thu Dec 25 , 2025
நாட்டில் பல வகையான திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அவற்றில் சில மாநில அரசுகளாலும், மற்றவை மத்திய அரசாலும் நடத்தப்படுகின்றன. இந்தத் திட்டங்களின் நோக்கம் ஏறக்குறைய ஒன்றுதான். ஏழை மற்றும் தேவைப்படுபவர்களுக்குப் பலன்களை வழங்குவது. பல திட்டங்கள் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக நிதி உதவியை அனுப்புகின்றன. இருப்பினும், பல திட்டங்கள் மானியங்கள் அல்லது பொருட்கள் போன்ற பிற உதவிகளை வழங்குகின்றன. உதாரணமாக, ஆயுஷ்மான் அட்டை அத்தகைய ஒரு திட்டமாகும். இதில் தகுதியுள்ளவர்களுக்கு […]
ayushman bharat yojana 1 1

You May Like