தவெக மாநாட்டு திடலில் நடப்பட்ட கொடிக்கம்பம் சாய்ந்ததால் அங்கு பரபரப்பு நிலவியது..
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தவெக தனது முதல் தேர்தலை சந்திக்க தயாராக உள்ளது.. அக்கட்சியின் கட்டமைப்பை பலப்படுத்தும் பணியில் விஜய் ஈடுபட்டு வருகிறார்.. அந்த வகையில் தவெகவின் 2வது மாநில மாநாடு மதுரை பாரபத்தியில் நாளை நடைபெற உள்ளது.. 500 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள மாநாட்டுத் திடலில் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளன.. 1.5 லட்சம் இருக்கைகள், 200 அடி நீளத்திற்கு பிரம்மாண்ட மேடை, 800 அடி நீளத்திற்கு ராம்ப் வாக் மேடை என மதுரையே களைக்கட்டி உள்ளது..
இந்த நிலையில் தவெக மாநாட்டு திடலில் நடப்பட்ட கொடிக்கம்பம் சாய்ந்ததால் அங்கு பரபரப்பு நிலவியது.. 100 அடி கொடிக்கம்பம் சாய்ந்த போது அருகில் நின்றவர்கள் தள்ளிச்சென்றதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.. இந்த கொடிக்கம்பம் சாய்ந்த விழுந்த விபத்தில் அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார் நொறுங்கியது.. கிரேன் மூலம் கொடிக்கம்பத்தை நிறுவ முற்பட்ட போது அது சாய்ந்து விழுந்ததது.. இதனால் அங்கிருந்த தவெகவினர் அலறி அடித்துக் கொண்டு ஓடினர்..
பொதுவாக இதுபோன்ற கொடிக்கம்பங்களை நிறுவும் போது யாரும் அங்கு நிற்கக்கூடாது என்று அறிவுறுத்தப்படுவது வழக்கம்.. ஆனால் தவெகவினர் இந்த கொடிக்கம்பம் நடும் நிகழ்ச்சியை ஒரு விழா போல் கொண்டாடி அருகில் நின்றுள்ளனர்.. எனினும் எதிர்பாராத விதமாக கொடிக்கம்பத்தை நிறுத்தக்கூடிய போல்ட்கள் சரியாக பொருத்தப்படாததால் இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது.. நடிகர் விஜய் கொடியேற்றுவதற்காக நிறுவப்பட இருந்த இந்த கொடிக் கம்பம் சாய்ந்து விழுந்ததால் தவெகவின் அதிர்ச்சியில் உள்ளனர்..