தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. திமுக ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் பரப்புரையை முன்னெடுத்து வருகிறது.. அதே போல் அதிமுகவும் மக்களை மீட்போம் தமிழகத்தை காப்போம் என்ற பெயரில் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளது. ஒருபுறம் கூட்டணி பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகின்றன. மறுபுறம் சீமானின் நாம் தமிழர் கட்சியும் தனித்தே தேர்தலை சந்திக்க உள்ளார்.
அந்த வகையில் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகமும் தனது தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது.. முன்னதாக நடைபெற்ற மாநாடு மற்றும் செயற்குழு கூட்டத்தில் திமுக, பாஜகவை நேரடியாக விமர்சித்தார். இதன் மூலம் திமுக பாஜக உடன் கூட்டணி கிடையாது என்பதை விஜய் திட்டவட்டமாக அறிவித்தார்.
தவெக தலைமையில் கூட்டணி அமையும் என்றும் அவர் கூறினார்.
எனினும் பாஜகவும், திமுகவும் மீண்டும் மீண்டும் தவெகவிற்கு கூட்டணியில் இணைய அழைப்பு விடுத்து வருகின்றன.. ஆனால் ஒருபோதும் திமுக, பாஜக உடன் கூட்டணி கிடையாது என்று தவெக மறுத்து வருகிறது.. எனினும் பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறும் பட்சத்தில், அதிமுக உடன் கூட்டணி அமைக்கலாம் என கூறப்பட்டது.
இந்த நிலையில் தவெக தலைவர் விஜய் அரசியல் நகர்வு குறித்து முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. மாற்றத்தை நோக்கிய அரசியல் பயணத்தில் அதிமுக, பாஜக உடன் கூட்டணி வைக்க விஜய் விரும்பவில்லை என கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. தனியார் பத்திரிக்கையாளரிடம் கலந்துரையாடிய விஜய் tvk தலைமையில் கூட்டணி, முதல்வர் வேட்பாளரில் ஒரு போதும் சமரசம் இல்லை என்பதில் உறுதியாக உள்ளதாக கூறியுள்ளாராம்.
கூட்டணி பேச்சுவார்த்தை ஒரு புறம் இருக்க, மறுபுறம் கட்சியின் உட்கட்டமைப்பை பலப்படுத்தும் பணிகளில் விஜய் ஈடுபட்டு வருகிறார்.. இதனிடையே தவெகவின் 2-வது மாநில மாநாடு மதுரையில் நடைபெற உள்ளது.. ஆகஸ்ட் 25-ம் தேதி, இந்த மாநாடு நடைபெற உள்ள நிலையில் அதற்கான பணிகள் மும்மரமாக நடந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.
Read more: சூப்பர் திட்டம்..! தொழில் செய்ய போகும் நபரா நீங்கள்…? 50% மானியம் வழங்கும் மத்திய அரசு…!