தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் பல்வேறு பிரதான கட்சி தலைவர்களும் இப்போதே பிரச்சாரம் செய்ய தொடங்கி விட்டனர்.. அந்த வகையில் தவெக தலைவர் விஜய் நாளை முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.. சனிக்கிழமைகளில் மட்டும் சுற்றுப்பயணம் செய்யும் ஒரே நாளில் 3 மாவட்டங்களில் பிரச்சாரம் செய்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. ஒரே ஒரு ஞாயிற்றுக்கிழமை மட்டும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.. நாளை தொடங்கும் இந்த பிரச்சாரம் 15 கட்டங்களாக நடைபெற உள்ளது.. டிசம்பர் 20-ம் தேதி வரை விஜய் பிரச்சாரம் செய்ய உள்ளார்.
அதன்படி விஜய் முதல் கட்டமாக நாளை திருச்சியில் உள்ள மரக்கடை எம்.ஜி.ஆர் சிலை அருகே காலை 10.30 மணியளவில் தனது பிரச்சாரத்தை தொடங்க உள்ளார்.. அங்கு பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள பிரச்சார வாகனத்தில் விஜய் பிரச்சாரம் செய்ய உள்ளார். பின்னர் அரியலூர் பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சிலை அருகே விஜய் மக்களை சந்தித்து பிரச்சாரம் செய்ய உள்ளார். இதை தொடர்ந்து பெரம்பலூரில், பெரம்பலூ, குன்னம் ஆகிய இடங்களில் விஜய் பிரச்சாரம் செய்ய உள்ளார்..
இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் சுற்றுப்பயணத்தை முன்னிட்டு லோகோ வெளியிடப்பட்டுள்ளது. அந்த லோகோவில் ‘உங்க விஜய் நா வரேன்’ என்ற வாசகமும், விஜய் நிற்பது போன்ற புகைப்படமும் இடம்பெற்றுள்ளது.. வாகை சூடும் வரலாறு திரும்புகிறது, வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு போன்ற வாசகங்களும் அதில் இடம்பெற்றுள்ளன.. அண்ணா ஆட்சி அமைத்த 1967, எம்ஜிஆர் ஆட்சி அமைத்த 1977 ஆகிய ஆண்டுகளுடன் 2026ஐ குறிப்பிட்டு லோகோ வெளியாகி உள்ளது..