சேலத்தில் 2 கார்கள் மோதி விபத்து.. தாய், மகன் துடிதுடித்து பலி.. காணும் பொங்கல் நாளில் சோகம்..!

1557133 accident 2

சேலம் அருகே 2 கார்கள் மோதிக் கொண்ட விபத்தில் தாய், மகன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது..

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த சொகுசு கார் எதிரே சென்ற கார் மீது மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. கட்டுப்பாட்டை இழந்த சொகுசு கார் எதிரே சென்ற கார் மீது மோதியது.. இந்த விபத்தில் தாய் பிரியா (27), மகன் தஸ்விந்த் (4) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்..


காயமடைந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.. இந்த விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.. மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. கார் விபத்தில் தாயும் மகனும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது..

Read More : நீலகிரியில் திடீர் மண் சரிவு.. 3 வட மாநில தொழிலாளர்கள் பலியான சோகம்..!

RUPA

Next Post

மங்கலாதித்ய யோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போது..! வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்பம் ஏற்படும்.!

Sat Jan 17 , 2026
ஜோதிடத்தில், கிரகங்களின் ராஜாவான சூரியனும், கிரகங்களின் தளபதியான செவ்வாயும் இணையும் சேர்க்கை மிகவும் சக்திவாய்ந்ததாகக் கருதப்படுகிறது. 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், இந்த இரண்டு மாபெரும் கிரகங்களும் மீன ராசியில் இணைந்து ‘மங்கலாதித்ய யோகத்தை’ உருவாக்குகின்றன. இந்த அரிய சேர்க்கை சில ராசிக்காரர்களின் ஜாதகத்தில் ராஜயோகத்தை ஏற்படுத்தி, அவர்களின் நிதி மற்றும் தொழில் வாழ்க்கையில் முன்னோடியில்லாத மாற்றங்களைக் கொண்டு வரும். மகரம் மங்கலாதித்ய யோகம் மகர ராசிக்காரர்களுக்கு ஒரு […]
horoscope yogam

You May Like