கள்ளக்காதல் தொடர்பான சண்டையில் வாட்ச்மேன் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி முத்தையாபுரம் பொட்டுக்காடு மேல தெருவை சேர்ந்த சந்திரன் (வயது 55), ராமேஸ்வரம் – கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள வெள்ளப்பட்டி அருகே பாலம் கட்டும் பணியில் பாதுகாவலராக பணியாற்றி வந்தார். இவர், பணிபுரிந்த குடோனில், மர்ம நபர் ஒருவர் கட்டையால் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்த தருவைகுளம் காவல் நிலைய போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சந்திரனின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், கொலை வழக்குப் பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் போது, ராமநாதபுரம், ஏர்வாடி முத்தரையர் தெருவைச் சேர்ந்த மதுரை வீரன் (வயது 44) என்பவரும், கொலை செய்யப்பட்ட சந்திரனும் ஒரே பெண்ணை கள்ளக்காதலியாக வைத்திருந்துள்ளனர்.
இதுதொடர்பாக இருவருக்கும் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்துள்ளது. சந்திரனுக்கு மது வாங்கிக் கொடுத்து, பின்னர் வாய்த்தகராறின் போது கட்டையால் தாக்கி கொலை செய்ததாக மதுரை வீரன் வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைத்தனர்.
Read More : இந்த உணவுகளை சாப்பிட்டால் நிச்சயம் சிறுநீரக கற்கள் வரும்..!! மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை..!!