விருதுநகர் மாவட்டத்தில் சுமார் 1000க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன.. இந்தியாவில் 90% பட்டாசுகள் இங்கிருந்து தான் தயாரித்து அனுப்பப்படுகின்றன.. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பட்டாசு ஆலை விபத்துகள் அதிகரித்து வருகின்றன.. உரிமம் பெறாமல் பட்டாசு தயாரிக்கும் ஆலைகள் பெருகி உள்ளதே இதற்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.. பட்டாசு விபத்துகல் தொடர்கதையாகி வரும் நிலையில் இதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்த போது இன்று வெடி விபத்து ஏற்பட்டது.. கே. மேட்டுப்பட்டியில் சரவணன் என்பவருக்கு சொந்தமான விவசாய தோட்டத்தில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்த போது இந்த விபத்து நிகழ்ந்தது.. அனுமதி இன்றி கருந்திரி தயாரித்த போது மின்சார கசிவின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன..
இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.. வெடி விபத்தில் உயிரிழந்த இருவரும் அசாமை சேர்ந்த ஷிகில் உசேன், ஷபிகுல் அலி என கூறப்படுகிறது.. இந்த சம்பவம் தொடர்பாக அப்பய்யநாயக்கன்பட்டி காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..
Read More : “காங்கிரஸில் ஜிங் ஜாங் போடும் குரூப் தான் உள்ளது.. மக்களுக்காக பேச யாரும் இல்லை..” அண்ணாமலை விமர்சனம்..!



