யுனைடெட் வர்த்தக வங்கி எனப்படும் UCO வங்கி, 2025-ம் ஆண்டுக்கான தொழிற்பயிற்சி (Apprenticeship) அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தேசிய அளவில் மொத்தம் 532 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. தேர்வு செய்யப்படும் இளைஞர்களுக்கு ஒரு வருடம் பயிற்சி அளிக்கப்படும்.
பணியிடங்கள்: யுசிஓ வங்கியில் வழங்கப்படும் தொழிற்பயிற்சிக்கு தேசிய அளவில் 543 பணியிடங்களும், தமிழ்நாட்டில் மட்டும் 21 பணியிடங்கள் உள்ளன்.
வயது வரம்பு:
குறைந்தபட்ச வயது: 20 வயது நிரம்பியிருக்க வேண்டும்.
அதிகபட்ச வயது: 28 வயதைக் கடந்திருக்கக்கூடாது.
இட ஒதுக்கீடு பெறுபவர்களுக்கு மத்திய அரசின் விதிகளின்படி வயது தளர்வு வழங்கப்படும். குறிப்பாக, கைப்பெண்கள் மற்றும் கணவரை பிரிந்து வாழும் பெண்கள் இவர்களுக்கு அதிகபட்சம் 40 வயது வரை தளர்வு வழங்கப்படுகிறது. இந்த பயிற்சிக்கு தகுதியான பட்டதாரிகள் அனைவரும் உடனடியாக விண்ணப்பிக்குமாறு வங்கி அறிவித்துள்ளது.
கல்வித்தகுதி:
* விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பை (Graduation) முடித்திருக்க வேண்டும்.
* மேலும், அவர்கள் 01.04.2021 தேதி அல்லது அதற்கு பின்னர் பட்டப்படிப்பை முடித்து, மதிப்பெண் சான்றிதழ்களை (Mark Sheets) பெற்றிருக்க வேண்டும் என்பது அவசியமான நிபந்தனையாகும்.
* 2021 ஏப்ரல் 1க்குப் முன்பாக பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள்.
* விண்ணப்பத்தார்கள் பயிற்சி பெறும் மாநிலத்தில் மொழி தெரிந்திருக்க வேண்டும். அதாவது, தமிழ்நாட்டில் உள்ள இடங்களுக்கு தமிழில் எழுதப் படிக்க மற்றும் பேச தெரிந்திருக்க வேண்டும். இதற்கான திறன் தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பின்போது நடத்தப்படும். 10 அல்லது 12-ம் வகுப்பில் உள்ளூர் மொழி படித்தவர்கள், திறன் தேர்வில் இருந்து விலக்கு பெறலாம்.
ஊக்கத்தொகை: பயிற்சி பெறும் நபர்களுக்கு மாதம் ரூ.15,000 தொழிற்பயிற்சி வழங்கப்படும். இதில் வங்கி மூலம் ரூ.10,500 வழங்கப்படும். அரசு தரப்பில் இருந்து ரூ.4,500 வழங்கப்படும்.
எப்படி விண்ணப்பிப்பது? UCO வங்கியின் தொழிற்பயிற்சிக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://nats.education.gov.in/student_type.php என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி 30.10.2025.



