நெல்லை தச்சநல்லூர் பகுதியில் நடைபெற்று வரும் பாஜக பூத் பொறுப்பாளர்கள் மாநாடு இன்று நடைபெற்று வருகிறது.. இந்த மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்றுள்ளார்.. இந்த மாநாட்டில் பேசிய அமித்ஷா “ தமிழக மண் வீரம் மிக்கது, கலாச்சாரம் மிக்கது.. அதனை வணங்கி எனது உரையை தொடங்குகிறேன்.. புண்ணிய பூமியான தமிழகத்தில் தமிழக மக்களாகிய உங்களிடம் தமிழில் பேச முடியாததால் வருந்துகிறேன்.. அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்..
நாகாலாந்து ஆளுநர் இல. கணேசனின் ஆன்மா சாந்தியடையட்டும் என பிராத்திறேன்.. தமிழகத்தை சேர்ந்த அப்துல் கலாமை ஜனாதிபதி பொறுப்பில் அழகு பார்தது தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி தான்.. தமிழரான சி.பி. ராதாகிருஷ்ணனை துணை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்திய பிரதமர், நட்டாவுக்கு நன்றி.. ராஜ்யசபாவின் சபாநாயகராக தமிழ் மண்ணை சேர்ந்த சி.பி ராதாகிருஷ்ணன் அமரப் போகிறார்..
திருக்குறளை 13-க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிமாற்றம் செய்தவர் பிரதமர் மோடி.. மோடி தமிழ் மண், மக்கள், மொழியின் முக்கியத்துவத்தை உணர்ந்தவராக உள்ளார்.. கங்கை கொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனின் நினைவை போற்றி மாபெரும் விழா எடுத்தவர் பிரதமர் மோடி.. காசியில் ஆண்டுதோறும் தமிழ் சங்கமம் நிகழ்வை நடத்தி வருகிறோம்..
அப்பாவிகளை மதத்தின் பெயரால் கொலை செய்த நிகழ்வு பஹல்காமில் நடைபெற்றது.. ஆபரேஷன் சிந்தூர் மூலம் தீவிரவாதிகளை அவர்களின் இருப்பிடத்திற்கே சென்று அழித்தோம்..
பிரதமர், முதலமைச்சர்கள், அமைச்சர்கள் சிறை செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டால் அவர்களின் பதவி பறிக்கப்படும்.. இது தொடர்பான புதிய மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.. பொன்முடி, செந்தில் பாலாஜி ஆகியோர் சிறையில் இருந்தவர்கள், அவர்கள் ஆட்சி செய்ய முடியுமா? 130 சட்ட முன்வடிவை கருப்பு சட்டம் என்று கூற முதலமைச்சருக்கு எந்த அதிகாரமும் இல்லை.. ஏனெனில் நீங்கள் இருட்டு நடவடிக்கையில் ஈடுபடுவர்கள்.. உங்களுக்கு அதை சொல்ல அதிகாரம் இல்லை..
தமிழ்நாட்டில் அதிமுக – பாஜக கூட்டணியின் ஆட்சி அமைய உள்ளது.. திமுகவினரின் ஊழல் தொடர்ந்து கொண்டே வருகிறது.. டாஸ்மாக் ஊழல், எல்காட் ஊழல், போக்குவரத்து ஊழல், மணல் கொள்ளை ஊழல், இலவச வேட்டி சேலை திட்டத்தில் ஊழல், 100 நாள் வேலைத்திட்டத்தில் கூட ஊழல் நடந்துள்ளது..
அதிமுக உடனான கூட்டணி வெறும் அரசியல் கூட்டணி அல்ல.. அது தமிழக மக்களை முன்னேற்றுவதற்கான கூட்டணி.. கடந்த மக்களவை தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி 39 சதவீதம் வாக்கு வாங்கியிருந்தோம்.. கூட்டணியில் உள்ள ஒவ்வொருவரும் வெற்றி பெற உழைக்க வேண்டும்..
உதயநிதியை முதல்வராக்க வேண்டும் என்பது தான் திமுகவின் லட்சியம். ராகுலை பிரதமராகக் வேண்டும் என்பது தான் சோனியா காந்தியின் லட்சியம்.. திமுகவை வேரோடு பிடுங்கி அகற்ற வேண்டும்.. ராகுல்காந்தி ஒருபோதும் பிரதமராக முடியாது, உதயநிதி ஒருநாளும் முதலமைச்சராக முடியாது.. மோடி அரசின் திட்டங்களை மக்களிடம் எடுத்து சொல்ல வேண்டும்.. மோடியை வெற்றியாளராக கொண்டாட வேண்டும்.. வெற்றிக்கான முழக்கத்தை முன்னெடுங்கள்.. ” என்று தெரிவித்தார்..