கலிபோர்னியாவின் சாக்ரமென்டோ பகுதியில் நேற்றிரவு வானில் காணப்பட்ட மர்மமான ஒளிக் கோடுகளின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
சமூக வலைதளங்களில் அவ்வப்போது பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.. அந்த வகையில் தற்போது வானில் காணப்பட்ட மர்மமான ஒளி கோடுகள் என்ற வீடியோ வைரலாகி வருகிறது.. 40 வினாடிகள் கொண்ட இந்த வீடியோவை, கலிபோர்னியாவின் சாக்ரமெண்டோவில் உள்ள கிங் காங் ப்ரூயிங் நிறுவனத்தில் செயின்ட் பேட்ரிக் தின கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட ஜெய்ம் ஹெர்னாண்டஸ் படமாக்கினார். இதையடுத்து ஜெய்ம் ஹெர்னாண்டஸ் தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் வீடியோவை வெளியிட்டார், அதில் ” இது இன்று இரவு மதுபான ஆலையின் மீது பறந்தது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? யுஎஃப்ஒ.ஆக இருக்குமா..?
முக்கியமாக, நாங்கள் அதிர்ச்சியில் இருந்தோம், ஆனால் நாங்கள் அதைக் கண்டது ஆச்சரியமாக இருந்தது. இதற்கு முன்பு நாங்கள் இதுபோன்ற எதையும் பார்த்ததில்லை.” என்று குறிப்பிட்டுள்ளார்.. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், அது யு.எஃப்.ஓவா அல்லது வால்நட்சத்திரமா என்ற விவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்..