ராமநாதபுரம் மாவட்டத்தில் குடிபோதையில் நடந்த கொடூரமான கொலை சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கருப்பாயி என்ற பெண், கருப்பசாமி என்பவரால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இறந்த கருப்பாயியின் மகள் திவ்யா, தனது கணவர் இறந்த பிறகு தாய் வீட்டில் வசித்து வந்தார்.
மீன்பிடி வலை பின்னும் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த அவருக்கு, விருதுநகரை சேர்ந்த கருப்பசாமி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதையடுத்து, இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். மேலும், திவ்யா சில நேரங்களில் கருப்பசாமியை தனது தாய் வீட்டிற்கே அழைத்து வந்துள்ளார்.
இதைக் கண்ட கருப்பாயி கோபமடைந்து, இந்த உறவை கண்டித்துள்ளார். கருப்பசாமியின் பழக்கவழக்கங்கள் குறித்து கருப்பாயி விசாரித்தபோது, அவர் ஒரு குடிகாரர் என்றும், நிலையான வேலை இல்லாதவர் என்றும் தெரியவந்துள்ளது. இதனால், கருப்பசாமியுடனான உறவை கைவிடுமாறு மகள் திவ்யாவிடம் வலியுறுத்தியுள்ளார்.
ஆரம்பத்தில் தாயின் பேச்சைக் கேட்க மறுத்த திவ்யா, பின்னர் கருப்பசாமியின் நடவடிக்கைகள் பிடிக்காமல் அவரே ஒதுக்க ஆரம்பித்துள்ளர். இதனால் கோபமடைந்த கருப்பசாமி, திவ்யாவுடன் சண்டையிட்டு, அவரது வீட்டுக்கு வெளியே மது அருந்தியுள்ளார். அப்போது, அங்கு வந்த கருப்பாயி, கருப்பசாமியை கடுமையான வார்த்தைகளால் வசைபாடியுள்ளர்.
இதில், ஆத்திரமடைந்த கருப்பசாமி அருகில் இருந்த அரிவாளை எடுத்து, கருப்பாயியின் கழுத்தில் வெட்டியுள்ளார். இதையடுத்து, அங்கிருந்தவர்கள் கருப்பாயியை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவர் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். பின்னர், சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், கருப்பசாமியை உடனடியாக கைது செய்தனர்.
Read More : பெண்களே உஷார்..!! சுற்றிவளைக்கும் நிர்வாண கும்பல்..!! பீதியில் உறைந்துபோன கிராமம்..!!