கட்டுக்கடங்காத கலவரம்.. முன்னாள் பிரதமரின் மனைவி எரித்துக் கொலை! பல தலைவர்களின் வீடுகளுக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்!

nepal violence

பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் மற்றும் எக்ஸ் உள்ளிட்ட 26 முக்கிய தளங்களை முடக்க அரசாங்கம் எடுத்த நடவடிக்கை, நேபாளில் இளம் தலைமுறை இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.. இதனால் நேற்று நாடு தழுவிய போராட்டங்கள் நடந்த நிலையில் அவை வன்முறையாக மாறியது.. இதன் விளைவாக குறைந்தது 19 பேர் இறந்தனர் மற்றும் 250 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர், இது சமீபத்திய ஆண்டுகளில் நாடு கண்ட மிகக் கொடிய போராட்டமாக அமைந்தது.. இதையடுத்து நேபாள அரசு நேற்று இரவே சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியது..


ஆனால் நேபாளத்தில் உள்ள ஊழல் அரசாங்கம் பதவி விலக வேண்டும் என்று கோரி போராட்டக்காரர்கள் இன்றும் போராட்டத்தை தொடர்ந்தனர்.. நேபாளத்தில் நாடாளுமன்ற கட்டிடத்திற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்ததால் உச்சக்கட்ட பரபரப்பு நிலவியது.. அந்நாட்டில் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் ராணுவ பாதுகாப்பையும் மீறி, நாடாளுமன்றத்திற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் தீ வைத்தனர்.. இதையடுத்து நாடாளுமன்றம் முழுவதும் கரும்புகை சூழ்ந்தது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு நாட்டின் முக்கிய நிர்வாக வளாகமான சிங்கா தர்பார் மீது தாக்குதல் நடத்தினர்… ஊழல் மற்றும் கடுமையான நிர்வாகத்திற்காக பிரதமர் பதவி விலகக் கோரி போராட்டம் தொடர்ந்த நிலையில், பிரதமர் கே.பி. சர்மா ஒலி இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் நேபாளத்தில் ஆட்சி கவிழ்ந்துள்ளது.. மேலும் அங்கு அசாதாரண சூழல் நிலவுகிறது..

இன்று நடந்த வன்முறையில், முன்னாள் பிரதமர்கள் மற்றும் அமைச்சரவை அமைச்சர்கள் உட்பட பல அரசியல் தலைவர்கள் காயமடைந்தனர். நேபாள முன்னாள் பிரதமர்கள் புஷ்ப கமல் தஹால் என்ற பிரசந்தா, ஷேர் பகதூர் தியூபா மற்றும் ஜலநாத் கானல் ஆகியோரின் வீடுகளும் போராட்டக்காரர்களால் சேதப்படுத்தப்பட்டன.

நேபாளத்தில் நடைபெற்ற வன்முறை கட்டுக்கடங்காத கலவரமாக மாறிய நிலையில் முன்னாள் பிரதமரின் மனைவி தீயிட்டு கொளுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. நேபாள நாட்டின் முன்னாள் பிரதமர் ஜாலா நாத் கனலின் மனைவி ராஜ்ய லட்சுமி சித்ரகர் போராட்டக்காரர்களால் எரித்து கொல்லப்பட்டார்.. அவரை வீட்டில் அடைத்து வைத்து போராட்டக் காரர்கள் தீயிட்டு கொளுத்தினர்.. இதில் பலத்த காயமடைந்த நிலையில், அவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.. ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்..

போராட்டக்காரர்கள் பக்தபூரில் உள்ள பிரதமர் ஓலியின் வீட்டை எரித்தனர், அவர் பல்வதாரில் உள்ள பிரதமரின் இல்லத்தில் இருந்தார். எரிசக்தி அமைச்சர் தீபக் கட்காவின் இல்லம் போராட்டக்காரர்களால் தீக்கிரையாக்கப்பட்டது.

நேபாள அதிபர் ராம் சந்திர பவுடலின் தனியார் இல்லம் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்களால் சேதப்படுத்தப்பட்ட வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் தகவல் தொடர்பு அமைச்சர் பிருத்வி சுப்பா குருங்கின் வீட்டிற்கும் தீ வைத்தனர், நிதியமைச்சர் பிஷ்ணு பவுடலின் வீட்டின் மீது கற்களை வீசினர்.

பிஷ்ணு பிரசாத் பவுடலை சாலையில் துரத்திச் சென்று ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்கிய வீடியோவும் வெளியானது.. வீடியோவில், பவுடலே உயிருக்கு ஓடும்போது இருபதுக்கும் மேற்பட்டோர் துரத்துவதைக் காண முடிந்தது. ஒரு நபர் அவரை எட்டி உதைப்பதையும் மற்றவர்கள் அவரை அடிப்பதையும் காண முடிந்தது.

இதற்கிடையில், பல அரசு அதிகாரிகள் தலைநகர் காத்மாண்டுவை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது. அதிகாரப்பூர்வ கட்டிடங்கள், கட்சி அலுவலகங்கள், காவல் நிலையங்கள் ஆகியவையும் தப்பவில்லை, நாள் முழுவதும் தொடர்ச்சியான அழிவு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

காத்மாண்டுவில் உள்ள முக்கிய அரசு மற்றும் அரசியல் தளங்கள் வழியாக போராட்டக்காரர்கள் தொடர்ந்து நகர்வதால் வன்முறையைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் போராடி வருகின்றனர்.

RUPA

Next Post

துணை ஜனாதிபதியாக பதவியேற்கும் 3வது தமிழர்! யார் இந்த சி.பி. ராதாகிருஷ்ணன்?

Tue Sep 9 , 2025
துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர் உடல்நலக்குறைவை காரணம் காட்டி திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் செப்டம்பர் 9-ம் தேதி நடைறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், துணை ஜனாதிபதி வேட்பாளராக கூட்டணி சார்பில் சிபி. ராதாகிருஷ்ணன் போட்டியிடுவார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்தியா கூட்டணியின் குடியரசு துணை தலைவர் வேட்பாளராக சுதர்சன் ரெட்டி […]
CP Radhakrishnan 1757427859015 1

You May Like