2026 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனைப் போட்டி நிலவுகிறது.. பாமக, தேமுதிக போன்ற கட்சிகளும் ஏதேனும் ஒரு கட்சியுடன் கூட்டணி வைக்கும் என்று கூறப்படுகிறது..
ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் திமுக முழு வீச்சில் தேர்தல் பணிகளை தொடங்கி உள்ளது.. இந்த முறை எப்படியாவது ஆட்சி அமைக்க வேண்டும் என்று அதிமுக பாஜக கூட்டணி பணிகளை தொடங்கி உள்ளது.. குறிப்பாக பாஜக திமுகவை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்ற நோக்கில் தேர்தல் பணிகளை தொடங்கி உள்ளது..
அந்த வகையில் சமீபத்தில் தாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகளையும் பாஜக அதிமுகவிடம் வழங்கி உள்ளது.. வெற்றி வாய்ப்புள்ள 70 தொகுதிகளின் பட்டியலையும் இபிஎஸ்ஸிடம் நயினார் அளித்ததாகவும் கூறப்படுகிறது.. ஆனால், அதனை இபிஎஸ் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.. தேர்ந்தெடுத்துள்ள 70 தொகுதிகளில் 50 தொகுதிகளை ஒதுக்க பாஜக தரப்பில் நயினார் கொரியதாகவும் கூறப்படுகிறது.. எனினும் கடந்த தேர்தலில் 20 தொகுதிகள் கொடுத்ததால் இந்த முறை 30 தொகுதிகளை கொடுக்கலாம் என்று இபிஎஸ் கூறியதாகவும் தெரிகிறது.. எப்படியும் இந்த முறை அதிமுக கூட்டணியில் அதிக இடங்களையே கேட்டு பெறும் என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன..
இந்த நிலையில் தமிழக தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மத்திய இணை அமைச்சர்களான அர்ஜுன் மேக்வால், முரளிதர் மோஹோ ஆகியோர் இணை பொறுப்பாளாராக நியமிக்கப்பட்டுள்ளார்.. பாஜக தேசிய தலைமை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.. 2021 சட்டமன்ற தேர்தல், 2019 மக்களவை தேர்தல்களில் பியூஷ் கோயல் தமிழக தேர்தல் பொறுப்பாளாராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Read More : Flash : ராமதாஸும் அன்புமணியும் இணைவார்கள் எனில் கட்சியை விட்டு விலக தயார்.. ஜி.கே மணி அறிவிப்பு.!



