தமிழகத்தின் ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் மீண்டும் ஒருமுறை இலங்கை கடற்படையினரின் கைது நடவடிக்கைக்கு ஆளாகியிருப்பது கடலோர கிராமங்களில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. நேற்று முன்தினம் ராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து 2 விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 8 மீனவர்கள், மன்னார் வளைகுடா மற்றும் நெடுந்தீவு அருகே தங்களது மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்கள் சர்வதேச கடல் எல்லைக் கோட்டை தாண்டியதாகக் குற்றம் சாட்டி அவர்களைச் சுற்றி வளைத்தனர்.
மீனவர்களின் படகுகளைப் பறிமுதல் செய்ததோடு மட்டுமல்லாமல், 8 பேரையும் கைது செய்த இலங்கை கடற்படையினர், விசாரணைக்காக அவர்களை தங்களது கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றனர். ஏற்கனவே கடந்த 4-ம் தேதி மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த 9 மீனவர்கள் இதேபோல் சிறைபிடிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ராமேஸ்வரம் மீனவர்களும் சிக்கியிருப்பது தமிழக மீனவர் சங்கங்களைக் கொதிப்படைய செய்துள்ளது.
Read More : RAC வசதி இல்லை, குறைந்தபட்ச கட்டணமே இவ்வளவா? வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலின் கட்டண விவரம் இதோ..!



