உலக நாடுகள் இதை செய்யும் வரை இஸ்ரேலுக்கு எதிரான போராட்டம் தொடரும்..!! – ஹமாஸ் அறிக்கை

Hamas 1200

கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதியன்று, இஸ்ரேலுக்குள் புகுந்து நூற்றுக்கணக்கானோரை பிணைய கைதிகளாக ஹமாஸ் அமைப்பினர் பிடித்துச் சென்றனர். இதனை தொடர்ந்து காஸா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. இந்த போரில் இதுவரை ஏராளமான பொதுமக்கள் உயிரிழந்தனர். இந்த போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என அமெரிக்கா, எகிப்து, கத்தார் ஆகிய நாடுகள் முயற்சித்து வந்தன.


இரண்டு ஆண்டுகள் ஆகியும் இதுவரை போர் முடிவுக்கு வரவில்லை. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா தொடர்ந்து சமாதான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. சமீபத்தில் நடத்திய பேச்சுவார்த்தைக்கான முயற்சியில், இஸ்ரேல் அரசு ஒரு முக்கிய நிபந்தனையை முன்வைத்தது. அதாவது, பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினர் ஆயுதங்களை கைவிட வேண்டும் என்பதுதான் அந்த நிபந்தனை.

இந்த நிலையில், ஹமாஸ் அமைப்பினர் அந்த நிபந்தனையை ஏற்றுக் கொண்டதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மத்திய கிழக்கு தூதரிடம் தெரிவித்துள்ளார். ஆனால், இந்த தகவலை ஹமாஸ் நேரடியாக மறுத்துள்ளது. இது தொடர்பாக ஹமாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாலஸ்தீனத்தை தனி நாடாக உலக நாடுகள் அங்கீகரிக்காத வரை, இஸ்ரேலுக்கு எதிரான எங்கள் போராட்டம் தொடரும். எங்கள் முழுமையான இறையாண்மையை உறுதி செய்யும் வரை எங்களது ஆயுதங்களை விடமாட்டோம். எங்களது உரிமையை விட்டுக் கொடுக்க முடியாது” என்று உறுதியுடன் கூறப்பட்டுள்ளது.

இதேநேரத்தில், காசா பகுதியில் உணவுக்காக காத்திருந்த பொதுமக்கள் மீது இஸ்ரேல் படை துப்பாக்கிச் சூடு நடத்தியது. இந்த தாக்குதலில் நிவாரணக் கூடங்கள் மற்றும் பொதுமக்கள் தங்கியிருந்த முகாம்களை சுற்றி 10 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Read more: மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பரிசு..! 3% DA உயர்வு? சம்பளம் எவ்வளவு உயரும்?

Next Post

எம்.பி. மஹுவா மொய்த்ரா இந்த பாலிவுட் நடிகரை காதலித்தாராம்.. காதல் கடிதம் கூட அனுப்பினாராம்..

Tue Aug 5 , 2025
தனது மனதில் பட்டதை வெளிப்படையாகப் பேசுவதில் பிரபலமானவர் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா.. அந்த வகையில் தற்போது நடிகர் பங்கஜ் திரிபாதி மீது தனக்கு மிகுந்த காதல் இருந்ததாக வெளிப்படையாக ஒப்புக்கொண்டார். சமீபத்தில் ஒரு பாட்காஸ்ட்டில் பேசிய மஹுவா தனக்குப் பிடித்த பாலிவுட் படங்கள் பற்றிப் பேசினார். மஹுவா மொய்த்ராவின் மிகப்பெரிய காதல் மஹுவா, “நான் முன்னாபாய் தொடரைப் பார்த்தேன், மீண்டும் பார்ப்பேன். விக்கி டோனர் பார்த்தேன், எனக்கு […]
mahua moitra pankaj tripathi

You May Like