மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையம் அமைக்க 100% வரை மானியம்..!! மத்திய அரசின் அசத்தலான திட்டம்..!!

electric car

சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்யவும், மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கவும் மத்திய அரசு ஒரு முக்கியத் திட்டத்தை அறிவித்துள்ளது. பிரதமர் இ-டிரைவ் (PM e-Drive) திட்டத்தின்கீழ், நாடு முழுவதும் மின்சார வாகனங்களுக்கான (EV) சார்ஜிங் நிலையங்களை அமைக்கப் பெரும் நிதி மானியத்தை மத்திய கனரக தொழில்கள் அமைச்சகம் அறிவித்துள்ளது. இதற்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகளையும் அமைச்சகம் வெளியிட்டுள்ளது.


முக்கியப் பகுதிகளுக்கு முழு மானியம் :

மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அத்தியாவசிய இடங்களில் ஊக்குவிக்கும் நோக்கில், அரசு அலுவலகங்கள், குடியிருப்புப் பகுதிகள், மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிலையங்கள் போன்ற பகுதிகளில் சார்ஜிங் நிலையங்கள் அமைக்க 100% மானியம் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

நெரிசல் மிகுந்த பகுதிகளுக்கு 80% மானியம் :

அதிக கூட்ட நெரிசல் உள்ள பகுதிகளான ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், மெட்ரோ ரயில் நிலையங்கள், எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் மற்றும் சுங்கச் சாவடிகள் போன்ற இடங்களில் சார்ஜிங் நிலையங்கள் அமைக்க 80% மானியம் அளிக்கப்படும். மேலும், இந்த நிலையங்களுக்கான பொருட்கள் வாங்கிட 70% மானியம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் ஷாப்பிங் மால்கள், மார்க்கெட்டுகள், விரைவுச் சாலைகள் மற்றும் சாலையோரங்கள் போன்ற போக்குவரத்து அதிகம் உள்ள வணிக மற்றும் பயணப் பகுதிகளிலும் சார்ஜிங் நிலையங்கள் அமைக்க 80% மானியம் வழங்கப்படும்.

திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு :

நாடு முழுவதும் மின்சார வாகனப் பயன்பாட்டை ஊக்கப்படுத்தும் விதமாக, பிரதமர் இ-டிரைவ் திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட ரூ. 10,900 கோடி நிதியில் இருந்து, சுமார் 72,300 சார்ஜிங் நிலையங்களை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த இலக்கை எட்டுவதற்குச் சுமார் ரூ. 2,000 கோடி செலவாகும் என மத்திய அரசு கணித்துள்ளது.

Read More : இளம்பெண்கள், ஆண்ட்டிகளை மயக்கி லாட்ஜில் ரூம் போட்டு உல்லாசம்..!! கேரளாவிலும் வேலையை காட்டிய வாலிபர்..!! சிக்கியது எப்படி..?

CHELLA

Next Post

தேநீர் வடிகட்டி கறையா இருக்கா?. இந்த டிப்ஸை டிரை பண்ணுங்க!. நொடிகளில் பளபளக்கும்!

Sun Oct 19 , 2025
ஒவ்வொரு வீட்டிலும் தேநீர் பிரியர்களைக் காணலாம். காலையாக இருந்தாலும் சரி, மாலையாக இருந்தாலும் சரி, ஒவ்வொரு சமையலறையிலும் தேநீர் எப்போதும் கொதிக்கும். ஆனால் தேநீர் தயாரிக்க தினமும் பயன்படுத்தப்படும் பொருள் பெரும்பாலும் அழுக்காகிவிடும்: தேநீர் வடிகட்டி. ஆனால் இப்போது நீங்கள் அதை எளிதாக சுத்தம் செய்யலாம். தேயிலை வடிகட்டிகளில் கறை ஏற்படுவதற்கு முக்கிய காரணம் தேயிலை இலைகளில் உள்ள டானின்கள் மற்றும் மூலிகை சேர்மங்கள் ஆகும். இவை படிப்படியாக வடிகட்டியின் […]
tea filter stained

You May Like