நாட்டில் ஒவ்வொரு நாளும் யுபிஐ பண பரிவர்த்தனைகள் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. இன்றைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன்படுத்தும் நிலையில் ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகள் சுலபமாகவும் எளிதாகவும் இருப்பதால் அதனை பலரும் பயன்படுத்துகிறார்கள். இந்தியாவில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு யுபிஐ பண பரிவர்த்தனைகள் மதிப்பு அதிகரித்துள்ளதாக சமீபத்தில் அறிக்கை வெளியானது. இதன் காரணமாக யுபிஐ செயலியை மேம்படுத்துவதற்காக பல்வேறு விதமான புதிய அப்டேட்டுகள் வெளியிடப்பட்டு வருகிறது.
கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe), பேடிஎம் (Paytm) மற்றும் பீம் (BHIM) போன்ற ஒட்டுமொத்த யுபிஐ ஆப்களுக்கும் இந்த விதிகள் அமலுக்கு வருகிறது. அதேபோல யுபிஐ ஆப்களுக்கு சேவைகளை கொடுக்கும் பேங்குகளுக்கும் இந்த விதிகள் அமல் செய்யப்பட இருக்கிறது. இதனால், யுபிஐ யூசர்களுக்கு ஏதாவது சிக்கல் ஏற்படுமா என்பதை முதலில் பார்க்க வேண்டும்.
உண்மையில், இந்த புதிய விதிகளால் ஜூன் 16ஆம் தேதிக்கு பிறகு யுபிஐ பரிவர்த்தனைகள் அதிகவேகமாக முடிக்கப்பட இருக்கிறது. அதாவது, யுபிஐ ஆப்கள் மூலம் ஒரு பரிவர்த்தனையை செய்யும்போது, அது இத்தனை நொடிகளில் முடிக்கப்பட வேண்டும் என்று இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் டைம் லிமிட்டை வைத்திருக்கிறது. இந்த லிமிட் மேலும் குறைக்கப்பட இருக்கிறது. முன்னதாக யுபிஐ ஆப்கள் மூலம் பணம் அனுப்புதல் (Debit) மற்றும் பெறுதல் (Credit) ஆகியவற்றுக்கு 30 நொடிகள் ரெஸ்பான்ஸ் டைம்மாக (Response Time) இருந்தது. அதாவது, பணத்தை நீங்கள் அனுப்பிய பிறகு அந்த பரிவர்த்தனை 30 நொடிகளில் முடிக்கப்பட வேண்டும் என்பதை இது குறிக்கிறது. இந்த ரெஸ்பான்ஸ் டைம் ஜூன் 16ஆம் தேதிக்கு பிறகு 15 நொடிகளாக குறைக்கப்படுகிறது.
ஆகவே, உங்களது யுபிஐ பரிவர்த்தனை அதிவேகமாக செய்து முடிக்கப்படும். இந்த ரென்பான்ஸ் டைம் மட்டுமல்லாமல், பரிவர்த்தனை ஸ்டேட்டஸ் (Transaction Status), பரிவர்த்தனை ரிவர்ஸ்சல் (Transaction Reversal) மற்றும் முகவரி சரிபார்ப்பு (Validate Address) ஆகியவற்றின் ரெஸ்பான்ஸ் டைம்மும் குறைக்கப்பட இருக்கிறது.
இவற்றின் டைம் லிமிட் எவ்வளவு என்பதை பார்ப்போம். யுபிஐ பரிவர்த்தனை வெற்றிகரமாக முடிந்த பிறகு பரிவர்த்தனை ஸ்டேட்டஸ் தெரிந்துகொள்ளவதற்கு 30 நொடிகள் ரென்பான்ஸ் டைம்மாக இருக்கிறது. இது ஜூலை 16ஆம் தேதிக்கு பிறகு 15 நொடிகளாக குறைக்கப்பட இருக்கிறது. அதேபோல பரிவர்த்தனையில் சிக்கல் ஏற்பட்டு வெற்றிகரமாக முடியாதபட்சத்தில், அந்த தொகை ரிவர்ஸ் செய்ய 30 நொடிகளாக ரென்பான்ஸ் டைம் உள்ளது.
இதுவும் 15 நொடிகளாக குறைக்கப்பட இருக்கிறது. ஆகவே, பரிவர்த்தனை ரிவர்ஸ்சல் 15 நொடிகளில் முடிக்கப்படுவதால், தொகையைும் அதிவேகமாக திரும்ப பெற்று கொள்ளலாம். பேமெண்ட் சர்வீஸ் புரொவைடர் (Payment Service Provider) ஆப்கள் மூலம் பரிவர்த்தனை செய்யும்போது, ஐஎப்எஸ்சி (IFSC) மற்றும் அக்கவுண்ட் விவரங்கள் அடிப்படையில் முகவரி சரிபார்ப்பு நடக்கிறது.
இதற்கான ரென்பான்ஸ் டைம் 15 நொடிகளாக இருக்கிறது. இந்த நேரமும் 15 நொடிகளாக குறைக்கப்பட இருக்கிறது. ஆகவே, ஜூன் 16ஆம் தேதிக்கு பிறகு மேலும் அதிகவேகமாக யுபிஐ பரிவர்த்தனைகள் முடிக்கப்பட இருக்கிறது. இதனால், கூகுள் பே, போன் பே, பேடிஎம் போன்றை யுபிஐ ஆப்கள் மற்றும் பேங்குகள் இணைந்து ரென்பான்ஸ் டைம்மை உறுதி செய்ய இருக்கின்றன.
Readmore: ஷாக்!. மலட்டுத்தன்மை அதிகரிக்க Wi-Fi தான் காரணமாம்!. ஜப்பான் ஆய்வில் அதிர்ச்சி தகவல்!