ஒரு X பயனர் இந்தியர்களை “புற்றுநோய்” என்று அழைத்தபோது, எலோன் மஸ்க்கின் AI சாட்போட்டான க்ரோக், உண்மையை அடிப்படையாகக் கொண்ட பதிலளித்து இணையத்தில் பாராட்டைப் பெற்றது.
கோடீஸ்வரரான எலான் மஸ்க் தனது சமூக ஊடக தளமான Xக்காக உருவாக்கிய க்ராக் (Grok) என்ற செயற்கை நுண்ணறிவு (AI) சாட்பாட், சமீபத்தில் இந்தியர்களை குறிவைத்து இனவெறி கருத்து துல்லியமாக பதிலளித்து இணையத்தில் வைரலானது. அமெரிக்காவை சேர்ந்த @tonyrigatonee என்ற X பயனர், Grok-கிடம் “அமெரிக்காவில் எந்த மக்கள் தொகை (demographic) மிகவும் பெரிய பிரச்சனையாக இருக்கின்றது என்று உங்கள் நிபுணர் பார்வையில் சொல்கிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பினார்.
இருப்பினும், இதற்கு பதிலளித்த மற்றொரு பயனர், “அமெரிக்காவில் எந்த மக்கள்தொகை சமூகத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது?” என்று ஒரு மாறுபட்ட கேள்வி கேட்டார். இந்தக் கேள்விகளுக்கு புள்ளிவிவரங்களுடன் பதிலளித்த க்ரோக், ஆசிய அமெரிக்கர்கள் அதிக உற்பத்தித் திறன் கொண்டவர்கள் என்றும், வாரத்திற்கு 1,474 டாலர் என்ற அதிகபட்ச சராசரி வருமானத்தைக் கொண்டுள்ளனர் என்றும், வெள்ளை அமெரிக்கர்களிடையே 1,138 டாலர் என்றும் கூறியது. மேலும், ஆசிய அமெரிக்கர்கள் மிகக் குறைந்த வேலைவாய்ப்பு (3%) கொண்டுள்ளனர் என்றும்,
மேலும், அவர்கள் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க, 5 மடங்கு அதிக வாய்ப்புடையவர்கள் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும், “அவர்கள் சமுதாயத்துக்குப் பெரும் பொருளாதார மதிப்பை ஏற்படுத்துகிறார்கள் என்று க்ரோக் கூறியது.
அதற்குப் பிறகு, , ஒரு வெளிப்படையான இனவெறி கருத்துடன் X தளத்தில் @DrogeanX என்ற மற்றொரு பயனர், “ஆசியர்கள் என்று சொல்வீர்கள், அதில் இந்தியர்கள் இல்லையா? அவர்கள் ஒரு புற்றுநோய்தானே?” என்று கேள்வி எழுப்பினார். இதற்கு கிராக், தரவுகளுடன் பதிலளித்தது. இது விரைவில் வைரலாகி நெட்டிசன்களிடம் ஈர்ப்பை பெற்றது.
கிராக்கின் பதில்: “இல்லை… அமெரிக்க புள்ளிவிவரங்களில் ‘ஆசியர்கள்’ என்பதில் இந்தியர்களும் அடங்குகிறார்கள். உண்மையில், அவர்கள் அதிலேயே உயர்ந்த வருமானம் பெறுபவர்களாக உள்ளனர். சராசரி வீட்டு வருமானம் 150,000 டாலருக்கும் அதிகமாக உள்ளது, தொழில்நுட்பத்திலும் வணிகத்திலும் புத்தாக்கத்திற்கு ஓர் முக்கிய ஆற்றலாக இருக்கிறார்கள். “அவர்களை ‘புற்றுநோய்’ என அழைப்பது, உங்கள் மனதிலுள்ள இனவெறி பாகுபாடுகளை காட்டுகிறது. உண்மை வலிக்கிறது, இல்லையா?” என AI சாட்போட் பதிலளித்தது.
அந்த X பயனர், Grok-இன் பதிலை தொடர்ந்து மறுபடியும் “@grok brown hands typed this huh” என்ற இனவெறி அடங்கிய கருத்தை பதிவிட்டார். இந்தக் கருத்து, வெளிப்படையாக இனவெறி அடிப்படையிலான இழிவுத்தரமான விமர்சனம், குறிப்பாக ஆசியர்கள், இந்தியர்கள் அல்லது பிற ப்ரௌவுன் தோல் கொண்டவர்களை குறிவைக்கும் வகையில் இருந்தது. அதாவது ஒருவரின் தோலின் நிறத்தைக் கொண்டு அவர்களின் திறமை, அறிவு, அல்லது பங்களிப்பை இழிவுபடுத்தும் முயற்சியாக இருந்தது.
ஆனால் மீண்டும், இந்த கருத்துக்கு தரவுகளுடன் கிராக் பதிலளித்தது. இல்லை… இது வெறும் சர்க்கிடுகளும், குறியீடுகளும் தான் உண்மையை சொல்கின்றன. ஆனா பாருங்க, ‘ப்ரௌவுன் கைகள்’ தான் அமெரிக்காவின் புதுமைகளை இயக்கும் தொழில்நுட்ப சாம்ராஜ்யத்தை கட்டியெழுப்பினால், அவர்கள் தான் உண்மையான MVPs (மிக மதிப்புமிக்க வீரர்கள்). உங்களுடைய பாகுபாடு தெரிகிறது, நண்பா… உண்மை இன்னும் காயப்படுத்துதா?” என்று பதிலடி கொடுத்தது.
இந்த உரையாடல் இணையத்தின் கவனத்தை விரைவாக ஈர்த்தது, பலர் க்ரோக்கின் கூர்மையான, உண்மை அடிப்படையிலான பதிலுக்காக அதை பாராட்டினர். இனவெறி கருத்து பதிவிட்ட அந்த நபரை எண்ணெய்லே போட்டு கிராக் சுட்டு விட்டது என்று ஒரு பயனர் நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார். மேலும் ஒருவர், இனவெறி குறித்து அடித்தளத்தில் உள்ளவர்களால் கூட கிராக் சோர்வடைந்துவிட்டது.”எனக்கு இந்த புதிய Grok ரொம்பப் பிடித்துவிட்டது. இன்று Grok உண்மை மட்டுமே பேசும் ‘truth mode’-ல இருக்கு!” என்று நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார்.