உத்ராகண்ட் மாநிலம் ஹரித்வாரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர்.
உத்ராகண்ட் மாநிலம் ஹரித்வாரில் உள்ள மன்ஷாதேவி கோவிலில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
உத்தரகாண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி, சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “மான்சா தேவி கோயிலுக்குச் செல்லும் பாதையில் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. SDRF,உள்ளூர் காவல்துறை, மற்றும் பிற மீட்புக் குழுக்கள் அவசரமாக சம்பவ இடத்திற்குச் சென்று நிவாரண மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
நான் தொடர்ந்து உள்ளூர் நிர்வாகத்துடன் தொடர்பில் இருக்கிறேன். நிலைமை உன்னிப்பாக கண்காணிக்கப்படுகிறது. இந்த சோகமான தருணத்தில் அனைத்து பக்தர்களின் நலனுக்கும் பாதுகாப்பிற்கும் அன்னை மான்சா தேவியிடம் பிரார்த்தனை செய்கிறேன்,” என அவர் கூறினார்.