உத்தரகாண்டின் கோல்திர் பகுதியில் சென்று கொண்டிருந்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் பலர் மாயமாகி உள்ளனர்.
உத்தரகாண்ட் மாநிலம், ருத்ரபிரயாக் மாவட்டத்தின் கோல்திர் பகுதியில் சென்று கொண்டிருந்த பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து அல்கநந்தா ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார், சுமார் 7 பேர் காயமடைந்துள்ளனர், மேலும் பலர் காணாமல் போயுள்ளனர்.
கர்வால் பிரிவு ஆணையர் வினய் சங்கர் பாண்டே இதுகுறித்து பேசிய “ருத்ரபிரயாக் மாவட்டத்தின் கோல்திர் பகுதியில் உள்ள அலக்நந்தா ஆற்றில் 18 இருக்கைகள் கொண்ட பேருந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார், ஏழு பேர் காயமடைந்தனர். மீட்பு நடவடிக்கைக்காக மாநில பேரிடர் மேலாண்மை மீட்பு படையினர், காவல்துறை மற்றும் நிர்வாகக் குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன,” என்று தெரிவித்தார்.
உத்தரகண்ட் காவல்துறையின் ஐ.ஜி. நிலேஷ் ஆனந்த் பரானே கூறுகையில், பேருந்து கட்டுப்பாட்டை இழந்து ருத்ரபிரயாக் மாவட்டத்தின் கோல்திர் பகுதிக்கு அருகே ஆற்றில் விழுந்தது.
மாநில பேரிடர் மீட்புப் படை (எஸ்.டி.ஆர்.எஃப்), உள்ளூர் காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் குழுக்கள் சம்பவ இடத்திற்கு வந்து மீட்புப் பணிகளைத் தொடங்கின.
கடந்த வாரம், மண்டியில் ஒரு தனியார் பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்த நிலையில் தற்போது இதேபோன்ற சம்பவம் நடந்தது. இந்த சம்பவத்தில் குறைந்தது ஒருவர் கொல்லப்பட்டதாகவும், 18 பேர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்து நடந்த நேரத்தில் பேருந்து ஜாஹுவிலிருந்து மண்டி நோக்கிச் சென்று கொண்டிருந்ததாக பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது. பேருந்து ஓட்டுநர் ஒரு கரடுமுரடான பகுதியில் மோதியதால் கட்டுப்பாட்டை இழந்து 200 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததாக கூறப்பட்டது.