மத்திய அரசு மருத்துவமனையில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு.. 10-ஆம் வகுப்பு தகுதி முதல் விண்ணப்பிக்கலாம்..!

job 2

மத்திய அரசு மருத்துவமனைகளில் செவிலியர், பார்மசிஸ்ட், டெக்னீஷியன் உள்ளிட்ட துணை மருத்துவப் பணியாளர்கள் மட்டுமின்றி, ஜூனியர் இன்ஜினியர், அசிஸ்டெண்ட் அட்மின் அதிகாரி, டிரைவர், ப்ரோகிராமர் போன்ற பல்வேறு பதவிகளுக்கான 2025 ஆம் ஆண்டுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 1,383 பணியிடங்கள் இந்த ஆண்டில் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


நிரப்பப்படும் பணியிடங்கள்:

  • உதவி உணவியல் நிபுணர்
  • வார்டன்
  • உதவி நிர்வாக அதிகாரி
  • உதவியாளர்
  • ஜூனியர் நிர்வாக உதவியாளர்
  • லோவர் டிவிசன் கிளார்க்
  • ஜூனியர் பொறியாளர்
  • அசிஸ்டண்ட் பொறியாளர்
  • ஜூனியர் ஆடியோலஜிஸ்ட்
  • பேச்சு பயிற்சியாளர்
  • எலெக்ட்ரிஷியன்
  • வையர்மேன்
  • லைன்மேன்
  • கேஸ் டெக்னீஷியன்
  • அசிஸ்டண்ட் லாண்டரி சூப்பர்வைசர்
  • ஒடி டெக்னீஷியன்
  • பார்மசிஸ்ட்
  • ஜூனியர் கணக்கு அதிகாரி
  • உதவி ஸ்டோர் அதிகாரி
  • CSSD டெக்னீஷியன்
  • மருத்துவமனை நிர்வாகி
  • லேப் டெக்னீஷியன்
  • நூலக உதவியாளர்
  • மெடிக்கல் ரெக்கார்டு அதிகாரி
  • ஜூனியர் மெடிக்கல் ரெக்கார்டு அதிகாரி
  • ஜூனியர் சமூக பணியாளர்
  • பல் டெக்னீஷியன்
  • கண் டெக்னீஷியன்
  • ரேடியோதெரபி தொழில்நுட்ப நிபுணர்
  • பெர்ஃப்யூஷனிஸ்ட்
  • கருவியலாளர் (Instrument Technician)
  • உதவி பாதுகாப்பு அதிகாரி
  • தீயணைப்பு அதிகாரி
  • தீயணைப்பு டெக்னீஷியன்
  • பிசியோதெரபிஸ்ட்
  • டிரைவர்
  • ஜூனியர் வார்டன்
  • சீனியர் நர்சிங் அதிகாரி
  • சுகாதார ஆய்வாளர்
  • ஆக்குபேஷனல் தெரபிஸ்ட்
  • இந்தி மொழிபெயர்ப்பாளர்
  • மாற்று அறுவை சிகிச்சை ஒருங்கிணைப்பாளர் (Transplant Coordinator)
  • யோகா பயிற்சியாளர்
  • ப்ரோகிராமர்
  • Prosthetic டெக்னீஷியன்
  • டையிலர்
  • கலைஞர்
  • மெடிக்கல் புகைப்பட கலைஞர்
  • உதவி ஆய்வு அதிகாரி

இந்த அனைத்துப் பதவிகளும் ஒரே தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

வயது வரம்பு: இந்த ஆட்சேருப்பில் ஒவ்வொரு பதவிக்கும் வயது வரம்பும், கல்வித் தகுதியும் தனித்தனியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பொதுவாக குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதி பெறுகின்றனர். மத்திய அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வு வழங்கப்படுகிறது.

கல்வித் தகுதி:

  • பதவியைப் பொறுத்து கல்வித்தகுதி மாறுபடும்.
  • டெக்னீஷியன், எலெக்ட்ரிஷியன், வையர்மேன் போன்ற தொழில்நுட்பப் பணிகளுக்கு ITI அல்லது டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • பல்வேறு அலுவலக மற்றும் துணை மருத்துவப் பணிகளுக்கு 12-ம் வகுப்பு தகுதி போதுமானதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
  • இந்த ஆட்சேர்ப்பில் 10-ம் வகுப்பு தேர்ச்சி முதல் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் வரை பல்வேறு பதவிகளுக்கு தகுதிபெற முடியும்.
  • முழுமையான கல்வித்தகுதி மற்றும் வயது வரம்பு விவரங்களைத் தெரிந்துகொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை சரிபார்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை: எய்ம்ஸ் உள்ளிட்ட மத்திய அரசு மருத்துவ நிறுவனங்களில் உள்ள இந்த காலிப்பணியிடங்களுக்கு கணினி வழியில் பொதுத் தேர்வு (CBT) மற்றும் பதவிக்கேற்ப நேர்முகத் தேர்வு நடத்தப்பட உள்ளது. ஒவ்வொரு பணியிடத்திற்கும் தேர்வின் வடிவம் மாறுபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்வு வரும் டிசம்பர் மாதத்தில் நாடு முழுவதும் உள்ள தேர்வு மையங்களில் ஒரே நேரத்தில் நடைபெறும். தேர்வர்கள் தங்களுக்கு அருகிலான மையத்தை விண்ணப்பிக்கும் போது தேர்வு செய்யலாம். தேர்விற்கான அட்மிட் கார்டு தேர்வு தேதிக்கு 3 நாட்களுக்கு முன்பு வெளியிடப்படும். இது அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக மட்டுமே பதிவிறக்கம் செய்ய முடியும். தபால் வழியாக அட்மிட் கார்டு அனுப்பப்படமாட்டாது என்பது குறிப்பிடத்தக்கது.

விண்ணப்பிக்கும் முறை:  விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் https://www.aiimsexams.ac.in/ என்ற இணையதளம் மூலம் மட்டுமே பதிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும்.  டிசம்பர் 2-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

Read more: வங்கக்கடல் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி..! கனமழை கொட்டி தீர்க்கும்..! வானிலை மையம் அலர்ட்..!

English Summary

Vacancies are available at AIIMS Hospital.. Those with 10th class qualification can apply..!

Next Post

காலையில் வெதுவெதுப்பான தண்ணீர் குடித்தால் என்ன நடக்கும்..? மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள்..?

Tue Nov 18 , 2025
நம் உடலின் ஆரோக்கியத்தைப் பராமரிக்க தண்ணீர் குடிப்பது எவ்வளவு முக்கியம் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், நாம் தண்ணீர் குடிக்கும் விதமும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. குறிப்பாக, காலையில் வெதுவெதுப்பான நீரைக் குடிப்பது பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது என்று ராஜம் பகுதி மருத்துவமனையின் ஹோமியோபதி மருத்துவர் டாக்டர் சுஜாதா கூறுகிறார். தினமும் காலையில் வெதுவெதுப்பான நீரைக் குடிப்பது செரிமானத்தை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளையும் குறைக்கிறது என்று […]
Woman is blowing into hot drink 1296x728 header 1 1

You May Like