இந்திய ரயில்வேயின் கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகமான ஐஆர்சிடிசி (IRCTC), தெற்கு மண்டல அளவில் காலியாக உள்ள விருந்தோம்பல் கண்காணிப்பாளர்கள் (Hospitality Monitors) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பணியிட விவரங்கள் :
நிறுவனம்: இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் (IRCTC)
பணியின் பெயர்: விருந்தோம்பல் கண்காணிப்பாளர் (Hospitality Monitors)
மொத்த காலியிடங்கள்: 64
பணியிடம்: தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா (தெற்கு மண்டலம்)
ஊதியம் மற்றும் பணிச் சூழல் :
இந்தத் பதவிக்குத் தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு, மாத ஊதியமாக ரூ.30,000 வழங்கப்படும். அத்துடன், இதர பயண மற்றும் இதர செலவினங்களும் நிறுவன விதிகளின்படி வழங்கப்படும். இந்தப் பணியின் முக்கிய பொறுப்பு, உணவு தயாரிப்பு மற்றும் உணவுப் பொருட்கள் பராமரிப்பின் தரம் மற்றும் சேவை ஆகியவற்றை உன்னிப்பாக கண்காணிப்பதாகும்.
மேலும், நிறுவனத்தின் கொள்கைகளின்படி தரத்தை மேம்படுத்துதல், வாடிக்கையாளர் சேவை மற்றும் கேட்டரிங் சேவைகளை நிர்வகித்தல் போன்ற அலுவலகப் பணிகளும் இதில் அடங்கும். தேர்வு செய்யப்படும் நபர்கள் ஒரு மாதத்தில் 22 நாட்களுக்கு ரயிலில் பணி செய்யும் வகையில் இந்தப் பணி அமையும்.
கல்வித் தகுதி மற்றும் வயது வரம்பு :
இந்த விருந்தோம்பல் கண்காணிப்பாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழ்க்கண்ட கல்வித் தகுதிகளில் ஏதேனும் ஒன்றைப் பெற்றிருக்க வேண்டும்.
* ஹோட்டல் மற்றும் விருந்தோம்பல் நிர்வாகத்தில் முழுநேர பி.எஸ்.சி (B.Sc.) பட்டம்.
* பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷனில் (BBA/MBA) இளங்கலை/முதுகலைப் பட்டம்.
* ஹோட்டல் மேலாண்மை மற்றும் கேட்டரிங் அறிவியலில் பி.எஸ்.சி (B.Sc.) பட்டம்.
* சுற்றுலா மற்றும் ஹோட்டல் மேலாண்மையில் எம்.பி.ஏ (M.B.A) பட்டம்.
விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு, 01.10.2025 தேதியின்படி 28 வயதுக்குள் இருக்க வேண்டும். மத்திய அரசு விதிகளின்படி, எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வுகள் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை :
இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க கட்டணம் எதுவும் கிடையாது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள், IRCTC-யின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.irctc.com -இல் உள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்ய வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன், தேவையான கல்வி மற்றும் பிற அசல் சான்றிதழ்கள், அவற்றின் நகல்கள் மற்றும் மூன்று புகைப்படங்களுடன் நேர்காணலுக்குச் செல்ல வேண்டும்.
நேர்காணல் நடைபெறும் நாள்: 18.11.2025



