தமிழகம் முழுவதும் கூட்டுறவுச் சங்கங்களால் நடத்தப்படும் ரேஷன் கடைகளில் (Ration Shop) காலியாக உள்ள விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பதவிகளுக்கான நேர்முகத் தேர்வு நாள் வெளியாகியுள்ளது.

அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்வது எப்படி..?
* விண்ணப்பித்தில் தெரிவித்துள்ள மின்னஞ்சல் முகவரிக்கு, அந்தந்த மாவட்ட கூட்டுறவு சங்க ஆள்சேர்க்கை அலுவலகம் மூலம் அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்வதற்கான பதிவு எண்/கடவு சொல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
* இந்த பதிவு எண்/கடவுச் சொல் மூலம், நீங்கள் விண்ணப்பித்த அந்தந்த மாவட்ட இணைதளத்தில் இருந்து அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
* நீங்கள் விண்ணப்பித்த மாவட்ட கூட்டுறவு சங்க ஆட்சேர்ப்பு அலுவலக (District Recruitment Bureau -Cooperative Department) இணையதளத்தில் Download Interview call letter என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
* மின்னஞ்சல் முகவரி மூலம் பெறப்பட்ட பதிவு எண்/கடவு சொல்-ஐ சமர்ப்பிக்க வேண்டும்.
* நேர்முகத் தேர்விற்கான அனுமதிச் சீட்டு உங்கள் திரையில் தோன்றும். அதனை, உங்கள் கணினியில் பதிவிறக்கம் செய்து கொண்டு, பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ளுங்கள்.
* அனுமதிச் சீட்டில் குறிப்பிடப்பட்ட நாளில், முதலில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும். எனவே, பிறந்த தேதிக்கான சான்றிதழ் (SSLC/HSC Marksheet), கல்வி சான்றிதழ், சாதிச் சான்றிதழ், விண்ணப்பத்தில் உள்ளது போன்று 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படம், தற்போது, வேலைபார்க்கும் நிறுவனத்திடம் இருந்து தடையின்மை சான்றிதழ் ஆகியவற்றை எடுத்துச் செல்ல வேண்டும்.
* சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பிறகு, தகுதியான நபர்கள் மட்டுமே அன்றைய தினம் நடைபெறும் நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்படுவார்கள். நேர்முகத் தேர்வுக்கு வராத விண்ணப்பதாரர்களுக்கு மறுவாய்ப்பு வழங்கப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.