தவெகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்த வைஷ்ணவி தவெக தலைவர் விஜய் மற்றும் தொண்டர்கள் மீது புகார் அளித்துள்ளார்.
விஜய், கடந்த ஆண்டு தொடங்கிய தமிழக வெற்றிக்கழகம் கட்சி இப்போது தமிழகத்தின் பெரிய கட்சிகளுள் ஒன்றாக வலுபெற்று வருகிறது. இக்கட்சி வளர காரணமாக இருப்பது விஜய் மட்டுமல்ல, இதில் சேர்ந்திருக்கும் சில நிர்வாகிகளும்தான். அப்படி, மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற தவெக நிர்வாகியாக இருந்தவர் வைஷ்ணவி. தான் செய்யும் பணிகளை அவ்வப்போது வீடியோவாகவும் இணையத்தில் வெளியிடுவது இவரது வழக்கம்.
இந்த சூழலில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் இருந்து விலகுவதாக வைஷ்ணவி அறிவித்தார். சமூக வலைதளங்களில் பேசக்கூடாது, போஸ்ட் போடக்கூடாது என்று தனக்கு கண்டீஷன் போடப்பட்டதாக குறிப்பிட்ட வைஷ்ணவி, இன்னும் ஒரு சில காரணங்களை அடுக்கி தான் இக்கட்சியில் இருந்து விலகுவதாக தெரிவித்தார். தொடர்ந்து சில நாட்களிலே செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்தார். பின்னர் திமுகவுக்கு ஆதரவாக பேசி வந்த இவர், அவ்வப்போது விஜயை நேரடியாக சமூக வலைதளங்களில் விமர்சித்து வந்தார்.
இந்த நிலையில் தவெக தலைவர் விஜய் மற்றும் தொண்டர்கள் மீது வைஷ்ணவி கோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். தவெக தொண்டர்கள் சமூக வலைதளங்களில் கேலி சித்திரம் பதிவிடுவதாகவும், இதனை கண்டித்து அறிக்கை வெளியிடாததால் விஜய் மீதும், தவெக தொண்டர்கள் மீதும் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
Read more: 2025 செஸ் உலகக்கோப்பை போட்டி இந்தியாவில் நடைபெறும்..!! – பிடே அதிகாரப்பூர்வ அறிவிப்பு