வால்பாறை : சிறுத்தை இழுத்து சென்ற சிறுமியின் உடல் 18 மணி நேரத்திற்கு சடலமாக மீட்பு..

14582229 valparai 1

வால்பாறையில் சிறுத்தை இழுத்து சென்ற சிறுமியின் உடல் 18 மணி நேரத்திற்கு சடலமாக மீட்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள தேயிலை எஸ்டேட்களில் தமிழ்நாடு மட்டுமின்றி ஜார்கண்ட் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அந்த வகையில் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ஒரு தம்பதி வால்பாறையில் உள்ள பச்சைமலை எஸ்டேட்டில் தங்கி தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தம்பதிக்கு 6 வயதில் ரோஷினி என்ற மகள் உள்ளார்.


இந்த நிலையில் நேற்று மாலை சிறுமி ரோஷினி வீட்டருக்கு உள்ள காளியம்மன் கோயில் முன்பு விளையாடிக் கொண்டிருந்தார். சிறுமியின் தாய் தண்ணீர் பிடித்து கொண்டிருந்தார். அப்போது புதரில் மறைந்திருந்த சிறுத்தை ஒன்று ஒன்று திடீரென வெளியே வந்து ரோஷினி மீது பாய்ந்து கழுத்தை கவ்வியது. இதை பார்த்து சிறுமியின் தாய் அலறிய நிலையில், ஆனால் அதற்குள் சிறுத்தை சிறுமியை கவ்வியபடி இழுத்துக் கொண்டு புதருக்குள் ஓடி மறைந்தது.

அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் சிறுமியை தேடும் பணியில் ஈடுபட்டனர். மேலும் தகவலறிந்து அங்கு வந்த வனத்துறையினர், காவல்துறையினர் சிறுமியை தேடும் பணியில் ஈடுபட்டனர். எனினும் இன்று காலை வரை சிறுமி கிடைக்கவில்லை. பின்னர் 2 மோப்பநாய் உதவியுடன் வனத்துறையினரும், காவல்துறையினரும் தீவிர தேடுதல் பணி நடந்தது. கிட்டத்தட்ட 18 மணி நேரத்திற்கு பிறகு, தற்போது சிறுமியின் உடல் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. அடர்ந்த படுகாயங்களுடன் கிடந்த சிறுமியின் உடலை மீட்ட வனத்துறையினர் மீட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது..

Read More : மறுகூட்டல் & மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்த மாணவர்களே..! 23-ம் தேதி வெளியாகும் பட்டியல்…!

English Summary

The body of a girl dragged by a leopard in Valparai has been recovered after being dead for 18 hours.

RUPA

Next Post

நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்க யோகா எப்படி உதவுகிறது? மேலும் பல ஆச்சர்ய நன்மைகள்..

Sat Jun 21 , 2025
நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த யோகா எவ்வாறு உதவுகிறது? என்று பார்க்கலாம். யோகா என்பது ஒரு உடல் பயிற்சி.. இது மனம் மற்றும் உடலை வலுப்படுத்தி, ஆன்மாவை ஆன்மீகமயமாக்கும் ஒரு முழுமையான பயிற்சி. நாடு முழுவதும் இன்று (ஜூன் 21) 11வது சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 2014 இல் ஐக்கிய நாடுகள் சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேச யோகா தினம், யோகாவின் பல்வேறு நன்மைகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை […]
pexels ivan samkov 6648540 1711170202874 1711170228746

You May Like