தினசரி வேலைகளிலும் காலை, மாலை வேளைகளில் செய்யக்கூடாத விஷயங்கள் இருக்கின்றன. அதாவது சூரிய உதயம் மற்றும் சூரியன் அஸ்தமனம் நேரங்களில் ஒரு சில விஷயங்களை செய்யக்கூடாது. ஏனென்றால் அந்த நேரத்தில் அந்த விஷயங்களை செய்யும்போது குடும்பங்களுக்கு கஷ்டம், இழப்பு வரலாம் என்பது நம்பிக்கை. அந்தவகையில் சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகு செய்யக்கூடாத விஷயங்கள்.
இரவில் நகங்களை வெட்டுவது அசுபமாகக் கருதப்படுகிறது. இதனால் பக்தர் லட்சுமி தேவியின் ஆசிகளைப் பெறுவதில்லை. மேலும், ஒருவர் மன ரீதியாகவும், நிதி ரீதியாகவும் பிரச்சினைகளை எதிர்கொள்வார்கள். வாஸ்து சாஸ்திரத்தின்படி, அழுக்குப் படுக்கையில் தூங்குவது எதிர்மறை சக்தியை உருவாக்கும். மேலும் வாழ்க்கையில் பல பிரச்சனைகள் தொடர்ந்து இருக்கும். எனவே, தூங்குவதற்கு முன், படுக்கை சுத்தமாக இருக்க வேண்டும். சுத்தமான படுக்கையில் தூங்குவது மன அமைதியைத் தரும் என்று நம்பப்படுகிறது.
இரவு நேரங்களில் வீட்டை சுத்தம் செய்யக்கூடாது. சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகு கட்டாயம் வீட்டை சுத்தம் செய்ய திட்டமிடாதீர்கள். இரவு நேரத்தில் வீட்டை துடைப்பதால் லட்சுமி தேவியின் அதிருப்தியை சந்திக்க நேரிடும். இதனால் வீட்டுக்கு வரும் செல்வம் தங்காமல் வறுமையும், கடனும் அதிகரிக்கும். வாஸ்து சாஸ்திரத்தின்படி இரவு நேரத்தில் வீட்டை சுத்தம் செய்வது நல்லதல்ல.
தூங்குவதற்கு முன் புத்தகங்களைப் படிப்பது பலரின் பழக்கம், ஆனால் தலையணைக்கு அடியில் புத்தகம் வைத்திருப்பது வாஸ்து சாஸ்திரத்தின்படி தவறானது. இது எதிர்மறை சக்தியை உருவாக்கி புதன் கிரகத்தை பலவீனப்படுத்துகிறது. இதனால் வாழ்க்கையில் பல பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
Read more: சட்டரீதியான நடைமுறை தெரியாத EPS ஒரு அரைவேக்காடு..!! – அமைச்சர் ரகுபதி விமர்சனம்